பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 285 பிறகு என்னைக் கோட்டையில் வந்து சந்தியுங்கள்" என்று சில காங்கிரஸ் தலைவர்கள் நிருபர்களிடம் கூறினர். அரசின் மிகப் பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருந்த அதிகாரிகள் ஒரு சிலர் தேர்தல் வாக்களிப்பு தொடங்குவதற்கு முதல் நாளே ராஜாஜிக்கும், காமராஜருக்கும் ஆளுயர மாலை அணிவித்து அவர்களிடம் ஆசி பெற்றுக் கொண்டனர். மக்களுக்கு பிற்படுத்தப்பட்ட சமுதாய ரீதியாகப் பொதுவான முற்போக்குத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டுமேயல்லாமல் யாரோ ஒருவர் இருவரை, பிற்படுத்தப் பட்டோரில் உயர் பதவிகளில் அமர்த்துவதால் அந்தச் சமுதாயத் திற்கு எந்த ஆதாயமும் இல்லை என்பதையும், அப்படி எந்தத் தனிப்பட்ட மனிதர்களைத் தூக்கி ஊட்கார வைக்கறோமோ - அவர்கள் நமக்கே துரோகம் செய்யத் தயாராக இருப்பார்கள் என்பதையும் நான் உணர்ந்து கொள்ள 1971-ஆம் ஆண்டு தேர்தலும் ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது என்றே கூறலாம். நான் போட்டியிட்ட சைதாப்பேட்டைத் தொகுதி தேர்தல் அலுவலகத்தையே போலீசார் சுற்றி வளைத்துக் கொண்டும் உள்ளே நுழைந்தும் சோதனையிட்டு, தேர்தல் பணியாற்றிய கழகத் தோழர்களை மிரட்டுகிற அளவுக்குப் பெரிய அதிகாரி களால் தூண்டிவிடப்பட்டார்கள் என்றால் எவ்வளவு பெரிய சூழ்ச்சி வளையத்தை முற்போக்குக் கூட்டணி உடைத்தெறிந்து விட்டு வெற்றி பெற பெற வேண்டியிருந்தது என்பதற்கு வேறு எடுத்துக்காட்டுகளே தேவையில்லை! நடந்து என் முதுகுக்குப் பின்னால் நடைபெற்ற சதிகளையும், சூழ்ச்சிகளையும் தெரிந்தும் தெரியாதவனைப் போல கொண்டு, தேர்தலை அமைதியாக நடத்தும் அரசுப் பொறுப்பை மிக்க அக்கறையுடன் கவனித்துக் கொண்டேன். ஒருவாறு தேர்தல் முடிவுற்று மார்ச் 10, 11ஆகிய நாட்களில் வாக்குகள் எண்ணப்பட்டன. முதல் நாள் 133 தொகுதிகளில் வாக்குகள் எண்ணப்பட்டதில் கழகம் 111 இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தம் 234 தொகுதிகளிலும் கழகத்திற்கு 184 இடங்களும், தோழமைக் கட்சிகளான இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிக்கு 8 இடங்களும், பார்வர்டு பிளாக் கட்சிக்கு 7 இடங் களும், பி.சோ. கட்சிக்கு 4 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 6 இடங்களும், தமிழரசு கழகத்திற்கு ஒரு இடமும், சிண்டிகேட் காங்கிரசுக்கு 15 இடங்களும் சுதந்திரா