பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 நெஞ்சுக்கு நீதி ஆனால் அவர் கேட்பதாக இல்லை. உடனடியாக வெளிக்காட்டிக் கொள்ளமுடியாத கோபத்தை ஆழமாக உள்ளத் தில் அடக்கி வைத்துக்கொண்டு, அமைச்சர் பதவிக் கோரிக் கையைக் கைவிட்டு விட்டார். தி.மு.கழக சட்டமன்ற கட்சித் தலைவராக நான் தேர்ந் தெடுக்கப்பட்ட பின்னர் ஆளுநர் உஜ்ஜல்சிங் அவர்களைச் சந்தித்து அமைச்சரவைப் பட்டியலை அளித்தேன். முதல்வராக நானும், கல்வி அமைச்சராக நாவலரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக என்.வி என்.னும், தாழ்த்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக திருமதி சத்தியவாணிமுத்துவும், உணவு அமைச்சராக ப. உ. சண்முகமும், தொழில் அமைச்ச ராக மாதவனும், பொதுப்பணித் துறை அமைச்சராக சாதிக் பாட்சாவும், கூட்டுறவுத் துறை அமைச்சராக சி. பா. ஆதித்தனா ரும், வேளாண்மைத் துறை அமைச்சராக அன்பில் தர்மலிங்கமும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக ராஜா, ராமும், மின்துறை அமைச்சராக ஓ. பி. இராமனும், போக்குவரத் துத்துறை அமைச்சராக பண்ருட்டி ராமச்சந்திரனும், அறநிலையத் துறை அமைச்சராக மு. கண்ணப்பனும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தோம். . மார்ச் 15-ஆம் நாள் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் அமைச்சரவைப் பதவியேற்கும் விழா நடைபெற்றது. தி. மு. கழகத்தின் முதல் அமைச்சரவை 1967 மார்ச் திங்கள் 6-ஆம் நாளும், இரண்டாவது அமைச்சரவை 1969 பிப்ரவரி 10 - ஆம் நாளும், மூன்றாவது அமைச்சரவை 1971 மார்ச் 15-ஆம் நாளும் பதவி ஏற்றன! ஆட்சி அமைச்சர் பதவியேற்றவர்களில் 1976-ஆம் ஆண்டு கழக கலைக்கப்படும்வரையில் கழகத்திலேயிருந்து-ஆட்சிக் கலைப்பு, மிசாக் கொடுமை போன்ற சோதனைகள் கழகத்தைக் தாக்கியபோதும், தேர்தல் தோல்விகளைக் கழகம் சந்திக்க நேரிட்டபோதும்-ஆடாமல், அசையாமல் கொள்கை குலையாமல் நிலைத்தவர்கள் யார் என்பதும்; பதவிச்சுவை-அதிகார அந்தஸ்து- இவற்றுக்காகப் பல் இளித்துக் கட்சி மாறிவிட்டவர் கள் யார் யார் என்பதும் நாட்டு மக்கள் அறிந்த உண்மையாகும். யார் அமைச்சரவை பதவியேற்ற அன்றிரவு கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நாடாளுமன்ற தி. மு.க.