பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 291 குழுத் தலைவராக நாஞ்சிலாரும், துணைத் தலைவராக இரா. செழிய னும் செயலாளராக சி.டி. தண்டபாணியும், கொறடாவாக ஜி. விசுவநாதனும், துணைக் கொறடாவாக மாயவனும், பொருளாள ராக சிட்டிபாபுவும், துணைச் செயலாளர்களாகபி . ஏ. சாமிநாதன், தா.கிருஷ்ணன் ஆகியோரும், மாநிலங்களவை குழுத் தலைவராக தில்லை வில்லாளனும், துணைத் தலைவராக டி. கே. சீனிவாசனும், கொறடாவாக புதுவை சிவப்பிரகாசமும் ஒருமனதாகத் தேர்ந் தெடுக்கப்பட்டனர். 1971-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுடன் இணைந்து நடைபெற்ற நடாளுமன்றத் தேர்தலில் புதுவை உட்பட நாற்பது இடங்களில், திரு. காமராசர் அவர்கள் போட்டியிட்ட நாகர் கோயில் தொகுதி ஒன்றைத் தவிர மற்ற எல்லா இடங்களும் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிக்கே கிடைத்தன என்பது குறிப்பிடத் தக்கதாகும். நண்பர் மதியழகன் அவர்களுக்கு அந்த அமைச்சரவையில் எப்படியும் இடம் தந்தே ஆக வேண்டுமென்று அவரது இளவல் கே. ஏ. கிருஷ்ணசாமி எனது இல்லத்தினை முற்றுகையிட்டு வாதாடினார்! போராடினார்! மதி அவர்கள் அமைச்சர் பதவியில் இருந்தபோது கே.ஏ. கிருஷ்ணசாமி பெயரால் வாங்கப்பட்ட வீடு ஒன்றினைக் குறித்துச் சட்டப் பேரவையில் புகார் கூறப் பட்ட காரணத்தினால்தான் மதியழகன் பதவியிழக்க நேரிட்டது என்ற அந்த நிலையில் மீண்டும் மதியழகன் அவர்களை அமைச்ச ராக்க இயலாத சூழலை நான் விளக்கினேன். ஆனால் இறுதியாக கண்ணீர் கண்டு கசிந்துவிடும் எனது பலவீனத்தின் காரணமாக மதியழகன் அவர்களைச் சபாநாயகராக ஆக்குவதற்கு ஒப்புதல் அளித்தேன். அதேபோலத்தான் பண்ருட்டி ராமச்சந்திரனின் கண்ணீர் என் கால்களையே நனைத்துவிட்ட நிலையில்; அமைச்சர் ஏ. மரணப்படுக்கையில் கோவிந்தசாமி அவர்களுக்கு அளித்த உறுதிமொழிக்கு மாறாக பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும் மந்திரிப் பதவி தரச் சம்மதித்தேன். மிகப் பெரும் தலைவர்களான ராஜாஜி, காமராஜர் இருவரது தலைமையில் தேர்தல் களத்தில் போரிட்ட அணியை வெற்றி கண்டு மிகப் பெரும்பான்மையான இடங்களைப் பெற்றிட்ட பூரிப்பில், கழகத்தோடு சேர்ந்து வளர்ந்த மதி போன்றவர்களை யும்-கண்ணீர் மல்க நின்ற பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற வர்களையும் புறக்கணிக்க என் மனம் இடம் தரவில்லை!