பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 நெஞ்சுக்கு நீதி போராட்டத்திலே குதித்தார். பெரியார் அவர்களின் சுய மரியாதை இயக்க பிரசாரமாக மாறினார். அல்லும் பகலும் அயராமல் உழைக்கின்ற தொண்டராக இருந்தார். இன்றைக்கு தி.மு.கழகத்தைக் கட்டிக் காக்கின்ற காவலர்களிலே ஒருவராக மதுரை மாவட்டத்திலே-ஏன், தமிழகத்திலே விளங்குகிறார். இது இங்கே அமர்ந்திருக்கின்ற இந்த மேயருக்குப் பின்னால் இருக்கின்ற வீர வரலாறு. கண்ணீர்க் காவியம். புதிய புற நானூறு படைத்தவர் இன்று மதுரை நகர மேயராக இருக்கிறார். முத்துவா? மேயராவதா? என்று எண்ணுபவரும் இருந்திடு வார்கள். மதுரை முழுதும் இன்று மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருக் கிறது என்றாலும் மகிழ்ச்சி அடைபவர்களிலே சிலருக்கு வியப் பிருக்கலாம். மதுரை முத்து மேயராவதா? இவ்வளவு பெரிய பதவிகளை ஏற்பதா? என்று எண்ணிடுவோரும் இருக்கத்தான் செய்வார்கள். நான் அவருக்கு அங்கியை எடுத்து - சங்கிலியை எடுத்து அணிவித்த நேரத்திலும் செங்கோலை எடுத்து அவர் கையிலே கொடுத்த நேரத்திலும் எனக்கு ஏற்பட்ட உணர்வெல்லாம் நான் என்னுடைய வாழ்க்கைத் துணை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட போது என்னுடைய மனைவிக்கு நான் மாங்கல்யம் எடுத்து அணிவித்தபோது எவ்வளவு பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டதோ அந்த மகிழ்ச்சியைத்தான் அந்த உணர்ச்சியைத்தான் இந்தக் கிழப்பெண்ணை மணந்துகொள்கிற இந்த நேரத்திலே பெற்றிருக்கின்றேன். ற நான் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட கழகத்தினுடைய முத்து இங்கே மதுரையினுடைய சொத்தாக உங்களுக்கெல்லாம் கிடைத்திருப்பது கண்டு நான் வாழ்த்துகின்றேன். அவருக்கு அணிவிக்கப்பட்டிருக்கின்ற சிவப்பு நிற ஆடையைத் தொட்டுப் பார்த்தால் பட்டுப் போன்ற மிருதுவான தன்மையைக் காண லாம். ஆனால் அந்த ஆடை மறைத்திருக்கின்ற அவர் மார்பகத் தில் எத்தனை எத்தனை விழுப்புண்கள் இருக்கின்றன என்பதை அவரோடு குடும்ப பாசத்தோடு பழகி இருக்கின்ற எங்களுக்குத் தான் அது தெரியும். அவருடைய கழுத்திலே இன்றைக்கு நூறு பவுன் தங்கச் சங்கிலி ஒன்றை மாட்டியிருக்கின்றோம். அந்தச் தங்கச் சங்கிலிக்குரிய கழுத்து எத்தனை கட்டாரிகளால் குறி பார்க்கப்பட்ட கழுத்து எத்தனை கத்தி வீச்சுகளுக்கு ஆளாக இருந்த கழுத்து; அதை நாம் அறிவோம்; நாடறியும்." இவ்வாறு நான் உரையாற்றிய மதுரை நிகழ்ச்சிக்கு முதல் நாள்; அதாவது ஏப்ரல் 30ம்-ஆம் நாள் திருக்கழுக்குன்றம்