பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 நெஞ்சுக்கு நீதி - கொண்டாலும் இல்லாவிட்டாலும் ருத்ராட்சம் அணிந்தாலும் அணியாவிட்டாலும் - துளசி மணி மாலை போட்டாலும் போடா விட்டாலும் - காவியாடை உடுத்தினாலும் உடுத்தாவிட்டாலும் கமண்டலத்தை கையில் ஏந்தினாலும் ஏந்தாவிட்டாலும் மனச்சாட்சிக்குப் பயந்து நடக்கிற மனிதன் தான் ஆண்டவன்! திருவாரூரில் பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த தேரை மறுபடியும் ஓட வைப்பதற்கான முயற்சிகளை கழக அரசு செய்து அதனை ஓடச் செய்தது. அந்த விழாவில் அறநிலையத் துறை அமைச்சராக இருந்த கண்ணப்பன் கலந்து கொண்டார். தேர் ஓடுவதற்கான சாலையினை பழுது பார்த்திட மட்டும் இரண்டு இலட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டது. மேலும் இரண்டு இலட்ச ரூபாய் பராமரிப்புச் செலவு போன்றவைகளுக்காகச் செலவு செய்யப்பட்டது. அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு தந்தை பெரியார் அவர்களின் முன்னிலையில் அமைச்சர்களுக்கு நடைபெற்ற ஒரு பாராட்டு விழாவில் நான் பேசும்போது "பகுத்தறிவு பிரச்சாரத்தை தொடருவோம்! அதே நேரத்தில் பக்திப் பிரச்சாரத்தைத் தடுக்க மாட்டோம்” என்று கூறினேன். அந்த விழாவில் மேலும் பேசும்போது "திருவாரூர் தேரை ஓட விட்டேன் என்பதும், அதற்காக நான்கு இலட்ச ரூபாய்க்குத் சாலை போடப்பட்டது என்பதும் பற்றி சிலர் நினைக்கலாம். ஆனால் தேர் நான்கு நாட்கள்தான் ஓடுகிறது. அதற்குப் பிறகு மக்கள் தான் அந்தப் பாதையில் நடக்கிறார்கள். அரசை நடத்து பவர்களுக்கு இப்படிப்பட்ட சாதுரியங்கள் தேவை. நாளைக்கு மறுநாள் போடக்கூடிய ரோட்டை இன்று தேர் ஓடுகிற நேரத்தில் போட்டால் பக்தர்களின் மனமும் பூரிக்கிறது. மக்களுடைய தேவையும் நிறைவேறுகிறது. நான் ஒரு புடவைக் கடையைத் திறந்து வைக்க அழைக்கப்படுகின்றேன். அப்போது அந்தக் கடையில் உள்ள புடவைகள் நன்றாக இருக்கிறது என்று சொன்னேனென்றால் உடனே ஒரு புடவையை எடுத்துக் கொடுத்து கட்டிக்கொள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அதைப் போல ஒரு ஆலயத் திருப்பணியைத் தொடங்கி வைக்கிறேனென்றால் உடனே அங்கேயிருக்கிற கடவுளை ஏற்றுக்கொள் என்று அவர் களும்சொல்லமாட்டார்கள். ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக் கொள் ளாததும் அவரவர்களது மனதைப் பொறுத்ததாகும்."