பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 303 ] பிச்சை எடுப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. விடுதிகளிலேயே அவர்களுக்கு நல்ல உணவு வழங்கப்பட்டது. விடுதியில் நோய்க்கு சிகிச்சையும் பெற்றுக் கொண்டு, தொழிலும் கற்றுக் கொண்டு, இனிப் பிச்சையெடுக்காமல் வாழ முடியும் என்ற நம்பிக்கையும் கொண்டு, அதன்படி நடப்பவர்கள் மட்டுமே விடுதிகளில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார்கள். ஷா, பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம் இந்தியாவுக்கே வழ காட்டும் வகையில் அமைந்திருக்கிறது” என்று ஆளுநர் கே. கே பல நிகழ்ச்சிகளில் புகழ்ந்துரைத்தார். செங்கற்பட்டுக் கருகில் உள்ள பரனூர் மறுவாழ்வு இல்லத்தில் அந்த விடுதியில் வாழ்வோருக்கான தொழில் இயந்திரமொன்றைத் துவக்கிவைத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள், தொழுநோய்ப் பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம் தமிழக அரசின் போற்றத்தக்க திட்டமென்று குறிப்பிட்டுப் புகழ்ந்து கூறினார். ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்த நாள் நிகழ்ச்சியின் போது இதேபோன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அரசின் சார்பிலும் பொதுமக்கள் உதவியுடனும் நடைமுறைப்படுத்தப் பட்டன. நகரங்களில் வாழும் ஏழை எளியோர், கிராமங்களில் வாழும் ஏழை எளியோர் மட்டுமல்ல; நடுத்தர வர்க்கத்தினர்கூட, தங்களின் கண்ணொளி பாதிக்கப்படுமேயானால் அதற்கேற்ற சிகிச்சை பெற்று புத்தொளி பெற்றிட முடியாத அளவுக்கு இருந்திட்ட நிலை என் உள்ளத்தைப் பல காலமாகக் குடைந்து கொண்டிருந்தது உண்டு. ஒரு ஏழை, தனது கண்ணொளியை இழந்து அதனை மீண்டும் பெற எண்ணினால், கிராமத்திலிருந்து நகர்ப்புற மருத்துவமனைக்குச் சென்று "கேட்ராக்ட்" அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும், மருத்துவமனையில் ஒரு வார காலம் ஓய்வெடுக்கவும், அப்போது தேவைப்படும் சத்துணவைப் பெறவும், மூக்குக் கண்ணாடி வாங்கிப் போட்டுக் கொள்ளவும் தேவையான குறைந்த பட்சத் தொகைக்குக் கூட வழியில் லாமல் இருந்தது மாத்திரமல்ல; அந்தப் பண வசதியே கிடைத் தால் கூட-கிராமத்திலிருந்து நகரத்திற்குச் சென்று சிகிச்சை செய்து கொள்ள வேண்டுமென்ற அக்கறையுமற்றிருந்தான். அந்த ஏழை எளியோர் இருக்கும் கிராமப்புறம் தேடிச் சென்று கண் டாக்டர்கள் புடைசூழ பெரிய அளவில் முகாம்களை அமைத்து ஒவ்வொரு முகாமிலும் சுமார் ஆயிரம் பேருக்குக்