பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 நெஞ்சுக்கு நீதி குறையாமல் பல்வேறுவிதமான கண் நோய்களுக்கு சிகிச்சை யளித்ததோடு-"கேட்ராக்ட்" அறுவை வைத்தியமும் நடத்தப் பட்டு அவர்களுக்கு அந்த முகாம்களில் ஒரு வாரம் தங்குவதற்குப் போதுமான வசதிகளும் வழங்கப்பட்டு - இப்படி நூற்றுக்கணக் கான முகாம்களில் லட்சக்கணக்கான மக்கள் கண்ணொளி கிடைக்கப்பெற்று மகிழ்ந்து திரும்பினார்கள். ' கண்ணொளி வழங்கும் அந்தப் பரவலான திட்டம் வெற்றி கரமாக நடைபெற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த பேராசிரியர் அவர்கள் பெரும்பணி ஆற்றி னார்கள். கண்மருத்துவ நிபுணரும் ஏழைகளுக்குக் கண்ணொளி வழங்குவதில் ஆர்வங்கொண்டவருமான மதுரை டாக்டர் வெங்கடசாமி அவர்கள், தமிழக அரசின் கண்ணொளி முகாம் களை கிராமப்பகுதிகளிலும் நகரப் பகுதிகளிலும் வெற்றிகரமாக நடத்தி லட்சக்கணக்கானோர் நன்மை பெற ஆக்கபூர்வமான யோசனைகளை அவ்வப்போது கூறியதுமல்லாமல் அவரும் உடனிருந்து அந்த முகாம்களில் நற்பணியாற்றினார். டாக்டர் ஆப்ரகாம், டாக்டர் செல்வம் போன்ற கண் மருத்துவ நிபுணர்கள் அந்த முகாம்களில் நூற்றுக்கணக்கான உதவியாளர் களுடன் தங்கியிருந்து அரிய சேவை புரிந்தனர். 5 "மனிதனை வைத்து மனிதன் இழுப்பதா? மனிதனா? பாடா?" இந்தக் கேள்வியை மகாத்மா காந்தியடிகள் கேட்டு, அதனைப் படித்து உணர்ச்சி வசப்பட்டிருக்கிறோம். ஆனால் அந்தக் கேள்விக்கு விடைகண்டு, அந்தக் கொடுமையை தீக்கத் தமிழகத்தில் எனது ஐம்பதாவது பிறந்தநாள் வரையில் பாரும் முன்வரவில்லை. சென்னையிலும் கடலூர் போன்ற நகரங் களிலும் ஏறத்தாழ இரண்டாயிரம் கைரிக்ஷாக்கள் இருந்தன. அந்த ரிக்ஷாக்கள் பெரும்பாலும் நடுத்தரக் குடும்பத்தினர் பாருக்காவது சொந்தமாக இருக்கும். அவற்றை இழுத்துப் பிழைப்பவர்கள் அன்றாடங் காய்ச்சிகளாக இருப்பர். எனது ஐம்பதாவது பிறந்த நாளின் போது அந்தக் கைரிக்ஷாக்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டு, அந்தக் கைரிக்ஷா தொழிலாளிகளுக்கு இலவசமாக சைக்கிள் ரிக்ஷா வழங்கப்படுமென அறிவித்தேன் அந்த அறிவிப்பு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. உரிய நஷ்டஈடு தரப்பட்டு எல்லா கைரிக்க்ஷாக்களையும் அரசாங் கம் கைப்பற்றிக்கொண்டது. அந்தக் கைரிக்ஷாக்களை மாடு போல் இழுத்து வயிறு கழுவி வந்த தொழிலாளிகளுக்கு அரசாங் கமே இலவசமாக சைக்கிள் ரிக்ஷாக்களை வழங்கியது.