பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 நெஞ்சுக்கு நீதி யாகப் ☐ பணத்தை லாபமாகக் குவித்துக் கொண்டிருந்தன. ஆட்சிப் பொறுப்பை நான் ஏற்றிருந்த அந்தக் கால கட்டத்திலே அந்தப் பழம் பெரும் பஸ் கம்பெனிகள் எல்லாம் நாட்டுடைமை ஆக்கப்பட்டு அரசின் போக்குவரத்துக் கழகங்களாக மாறின. பல்லவன், பாண்டியன், சேரன், சோழன், அண்ணா பெரியார், கட்டபொம்மன் என்ற பெயரில் அந்தப் போக்கு வரத்துக் கழகங்கள் மக்களின் தேவைக்கேற்ப சேவை புரியத் தொடங்கின. 1973-ஆம் ஆண்டு பஸ்களை முழுமையாகத் தேசீய உடைமையாக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டு முதல் கட்டமாக நீலகிரி மாவட்ட பஸ்களை முழுவதுமாக அரசுடைமை யாக்கினோம். அதற்குள் பஸ் முதலாளிகள் அந்த முற்போக்குச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரையில் சென்றனர். சுமார் பத்தாண்டுகால இடைக்காலத் தடைக்குப் பிறகு, அந்த வழக்கைத் தீர விசாரித்த உச்ச நீதிமன்றம் 1973-ல் கழக ஆட்சிக் காலத்தில் பஸ்களைத் தேசீய உடைமையாக்கிடக் கொண்டு வரப் பட்ட சட்டத்தைப் பாராட்டி அது செல்லத்தக்கதே எனத் தீர்ப்பும் அளித்துள்ளது. இந்த இரண்டாம் பாகத்தை எழுதிக் கொண்டிருக்கும்போது அந்த இனிப்பான செய்தி கிடைத் துள்ளது என்றாலுங்கூட, இன்றுள்ள எம். ஜி. ஆர். ஆட்சியில் அந்தத் தீர்ப்பைச் செயல்படுத்தாமல் முடக்கிப் போட்டு, பஸ் முதலாளிகளுக்குச் சாதகமாக ஒரு அவசரச் சட்டத்தையும் பிறப் பித்திருக்கிறார்கள். அண்ணா விரும்பிய தேசீயமயக் கொள்கை, அவரது பெயரை மட்டும் கட்சிக்குச் சூட்டிக்கொண்டவர்களால் குழிதோண்டிப் புதைக்கப்படுகிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று! விடுதலைப் போராட்ட காலத்தில் நில உச்சவரம்பு முழக்கத்தை எழுப்பிக் கொண்டிருந்த காங்கிரசும், தமிழ் நாட்டில் 1960-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் உச்சவரம்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது. திடீரென்று அறிவிக்கப் பட்டிருக்க வேண்டிய இந்தச்சட்டம் 1959-ஆம் ஆண்டிலேயே "வரப்போகிறது! வரப்போகிறது!" என்ற "பராக்கு”களுடன் பரிவட்டம்" கட்டிக்கொண்டு வந்த காரணத்தால் நிலப் பிரபுக்கள் அத்தனை பேரும் முன்கூட்டியே தங்கள் நிலங்களை உற்றார் உறவினர்களுக்கும், அறநிலையங்களின் பெயராலும், வீட்டில் உள்ள சாமி சிலைகள், சாமி படங்களின் பெயராலும் பிரித்துப் பிரித்து எழுதி வைத்துக்கொண்டனர். எல்லா நிலப்