பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 நெஞ்சுக்கு நீதி முன் ஜாக்கிரதையாகக் காரியங்கள் ஆற்றியதால் உச்சவரம்பு சட்டத்தில் கிடைத்த மிச்ச நிலம் மட்டும்தான்! அரசுக்கு 48 ஏக்கர் இதே வழியைப் பின்பற்றித்தான் வடபாதிமங்கலங்களும். மூலங்குடிகளும் தப்பித்துக் கொண்டன! அதனால்தான் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட உச்சவரம்புச் சட்டத்தை அண்ணா அவர்கள் மிச்சவரம்புச் சட்டம் என்று கேலி பேசினார். அந்தச் சட்டப்படி தமிழகம் முழுதும் உபரி நிலமாக அறிவிக்கப் பட்டது 24,194 ஏக்கர்! அதிலே அரசு அரசு கைப்பற்றியது 16,330 ஏக்கர்! நிலமற்ற விவசாயிகளுக்கு ஒப்படை செய்தது எதுவு மில்லை! 15 1970-ஆம் ஆண்டு பிப்ரவரியில் கழக ஆட்சி ஸ்டாண்டர்டு ஏக்கரா உச்சவரம்பு எனத்திடீர் என அறிவித்து ஒரு சட்டத்தையும் இயற்றியது. அந்த உச்சவரம்புச் சட்டத் தால் உபரி நிலமாக அறிவிக்கப்பட்டது 1,08,068 ஏக்கராகும்! அதில் அரசு கைப்பற்றியது 88,146 ஏக்கர்! நிலமற்றவர்களுக்கு ஒப்படை செய்த நிலம் 62,682 ஏக்கர்' பயனடைந்த உழவர் பெருமக்கள் 38,504 பேர்! இத்தகைய புரட்சிகரமான சட்டங்களையெல்லாம் கொண்டு வந்த கழக அரசு, நிதிநிலையின் காரணமாக மதுவிலக்குச் சட்டத்தை ஒத்திவைக்க வேண்டிய தவிர்க்க முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டது! அந்தச் சட்டம் ஒத்திவைப்பது பற்றி கேள்விப்பட்டு மூதறிஞர் ராஜாஜி அவர்களே என் இல்லம் தேடி வந்து அந்த எண்ணத்தைக் கைவிட வேண்டு மென்று கேட்டுக் கொண்டார். கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்களும் என்னைச் சந்தித்து வேண்டுகோள் விடுத் தார். கோவையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் எடுத்த முடிவுக்காக மதுவிலக்குச் சட்டத்தை ஒத்திவைக்க வில்லையென்றும், தமிழக அரசின் நிதி நிலைமையை உத்தேசித்துச் சிறிது காலம் அந்த ஒத்திவைப்புத் தேவைப்படுகிறதென்றும் அந்தப் பெரியவர்களிடம் விளக்கினேன். மதுவிலக்கை ஒத்தி வைத்து சட்டப்பேரவையில் நான் உரை நிகழ்த்தும்போதுகூட மெத்த வேதனையுடன்தான் இருந்தேன். "புனித நோக்கத்துடன் இந்தியப் புவி முழுவதும் எந்தக் கொள்கை விரிவாக்கப்பட வேண்டுமென்று காந்தியடிகள் கூறினாரோ, அந்தக் கொள்கை அவர் ஏந்திய கொடி நிழலில்