பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 313 நக்சலைட்வாதியைக் கூட காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணத் துடன் அந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய நிலையெல்லாம் உண்டு. சென்னை மேயராகப் பொறுப்பேற்றி ருந்த கிருஷ்ணமூர்த்தி அவர்களும், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த க.சுப்பு அவர்களும் என்னிடம் தந்த முறையீட்டைப் பெற்று, நண்பர் கலிய பெருமாள் அவர்களைத் தூக்குக் கயிற்றிலிருந்து வெளியே கொண்டு வந்தது கழக அரசு! இதுபோன்ற நடவடிக்கைகள் மேலும் தீவிரமடையாமல் இருப்பதற்கு நோய் என்ன என்பதை முதலிலே அறிந்து அதற்கு சிகிச்சை அளிப்பது போல சமுதாய-பொருளாதார அரசியல் ரீதியில் பிரச்சினைகளை எப்படி அணுக வேண்டுமென்று அனைவரும் யோசிக்க வேண்டும். அந்தக் கடமை அரசுக்கும், கட்சிகளின் தலைவர்களுக்கும் உண்டு என்பதையும் நினைவூட்டு கிறேன். - முதலமைச்சராக எம்.ஜி.ஆர். வீற்றிருக்க எதிர்க் கட்சித் தலைவனாக நானிருந்து தர்மபுரி வட ஆற்காடு, மாவட்டங்களில் நடைபெற்ற நக்சலைட் கிளர்ச்சிகள் குறித்து விவாதம் வந்த போது எடுத்து வைத்த கருத்துக்களின் சுருக்கம் தான் இது! அதன் தொடர்பாக 1982-ல் போலீஸ் மானியத்தில் பேசும் போது கூட நான் பின்வருமாறு குறிப்பிட்டேன். "நக்சலைட்டுகள் - போலீசார் இவர்களுக்கிடையில் ஏற்பட்ட ஒரு கைகலப்பின் காரணமாக போலீசாரும் நக்சலைட் இளைஞர்களும் மடிந்து போன ஒரு நிகழ்ச்சி குறித்து இந்த மன்றத்தில் ஒரு ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசப்பட்டபொழுது நான் சொன்ன கருத்துக்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரத் தக்கவையாகும். ஏன் நக்சலைட் உருவாகிறான்? எந்தச் சூழ்நிலையில் இப்படிப்பட்ட வன்முறைகள் தலைதூக்குகின்றன? மிதிக்க மிதிக்கப் புழுவும் புலியாகும் என்கிற அளவுக்கு ஏழை எளிய மக்கள்-விவசாயப் பெருங்குடி மக்கள் - தொழிலாள மக்கள் - முடக்கப்பட முடக்கப்பட. ஒடுக்கப்பட ஒடுக்கப்பட, கிளர்ந்தெழுகிறார்கள். இந்த அடிப்படையைப் பற்றி சிந்திக்காமல் அலட்சியப்படுத்தி விட்டு துப்பாக்கிக் குண்டுகளால் பிரச்சினையைத் தீர்த்து விடலாமெனக் கருதி --நக்சலைட் அல்லாதவர்களுக்கும் சூட்டி அவர்களைப் போலீசாரே கொன்று குவித்துத் தண்டனை நக்சலைட் பட்டம்