பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 315 6 ஆற்றலாளர் "விரிந்து மலர்ந்து தழைக்கும் அறிவுலகில் களாய்ப் பீடு நடை போடப் பட்டம் பெறுகின்றீர் இன்று. உமக் கிடையே வாழ்த்துரை தந்திட வந்துள எனக்குமோர் பட்ட மளிப்பினை நடாத்துகின்ற நிகழ்ச்சிக்கு எவ்வாறு நான் நன்றி கூறுவேன். சங்க காலத் தமிழகத்தில் விழுப்புண் படாது! இயற்கையாக ஒருவன் இறந்திடுவானாயின் அவன் சடலத்தைப் புதைப்பதற்கு முன்னர் கத்தியால் ஓர் காயத்தைச் செய்து அவனை விழுப்புண் பெற்றவனாய் ஆக்குதல் மரபாம். அவ்வாறே ஒன் எனக்கும் ஓர் பட்டத்தை அளித்து என்னையும் பட்டம் பெற்றவனாக அக்குகின்றீர் என எண்ணுகின்றேன். என் உழைப்பில் நான் மேலும் உற்சாகம் பெற்றிட - என் கொள்கை களில் நான் மேலும் உறுதிகொண்டிட - இந்தச் சிறப்பு எனக்குத் தரப்பட்டுள்ளதாகக் கருதி, இந்த விருது தமிழ் உணர்வுக்கும், கலையார்வத்துக்கும், பண்பட்ட பகுத்தறிவுத் கொள்கைக்கும் அளிக்கப்பட்ட விருது எனக் கொண்டு, இந்தப் பெருமையை என்னருந் தமிழர்க்கும் எனை வளர்த்த தலைவர்க்கும் *காணிக்கை யாக்குகின்றேன்." இப்படித் தான் அன்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் உரையைத் தொடங்கினேன். "இளைஞர்கள் தான் முற்போக்கு எண்ணங்களின் முன் னோடிகள். இளைஞர்களின் அமைதியின்மை - இந்தியப் பிரச்சினை அல்ல; அனைத்துலகப் பிரச்சினை! ஒவ்வொரு பழைய தலைமுறை யும், புதிய தலைமுறையைப் பழித்தே பழக்கப்பட்டிருக்கிறது. பிளேட்டோ காலத்திலிருந்து இப்படித்தான்; இன்று நேற்றல்ல! "இந்தத் தலைமுறை முன்புபோல் இல்லை. தரம் குறைந்து விட்டது" இது நமது பாட்டனார் காலத்திலிருந்து பரம்பரை பரம்பரை யாகச் சொல்லப்படும் குறை! குடுமித் தலையில் மாற்றம் ஏற்பட்ட போதும் குமுறல் -இப்போது உடலைப் பிடிக்கும் உடைகளைக் காணும்போதும் குமுறல்-நடையுடைகளில் ஏற்படும் மாற்றங் களல்ல; மனத்தில் ஏற்படும் மாற்றங்கள் தான், சமுதாயத் துறையிலும், பொருளாதாரத் துறையிலும், புதிய கோணங்களை ஏற்படுத்தவல்லவை! ஒரு தலைமுறைக்கும் இன்னொரு தலை முறைக்கும் வேறுபாடு இருப்பது தவறில்லை. ஆனால், இடையில் ஆக்க பூர்வமான வளர்ச்சி தழைத்திடல் தேவை. பிளேட்டோ காலத்திம் சில நூறு மாணவர்கள் இருந்தார்கள்; ஆனால் இன்று