பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 நெஞ்சுக்கு நீதி அமெரிக்க நாட்டின் மக்கள் தொகையில் பாதிப்பேர் மாணவர்கள். இந்தியாவில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருக்கும் மாணவர்களின் தொகை, பிரான்சு நாட்டு மக்கள் தொகைக்குச் சமம். மாணவர்களில் ஒரு சிலரது உள்ளத்தில் தீவிரவாதம் பொங்கியெழுந்து வழிந்தோடுகிறது. நான் தீவிரவாதத்தின் பகைவனல்ல. முகத்திலே இருக்கும் பருக்கள் அழகைக் கெடுக் கின்றன. உண்மை தான். அதற்கு அடிப்படைக் காரண முணர்ந்து மருந்திடல் தான் முறையே தவிரச் சந்திர பிம்பமெனும் வதனத்தை விகாரமாக்கும் பருக்களைக் கிள்ளி எறிகிறேன் என நகங் கொண்டு பெயர்த்தெறிந்தால் ரந்தம் கொப்பளிக்கும். தழும்புகள் தோன்றும். சில வேளைகளில் புண்பட்டுப் புரையோடி உயிருக்கே உலை வைக்கும். குறு மருக்களை அகற்றும் கொள்கை யில் வேறுபாடில்லை. முறையில் தானே முரண்பாடு! இலட்சியத்தைப் போலவே இலட்சியத்தை அடையும் வழிமுறை களும் நன்முறைகளாக இருத்தல் வேண்டும். பல்கலைக் கழகத்திற்கு வரும் பாதையிலே பால் வடியும் முகத்தினன்- மாணவன் ராஜேந்திரன் சிலையாக நின்று கொண்டி ருக்கிறான். தன்னை வளர்த்த மொழியைக் காக்க, அவன் தன்னுயிரைத் தாரை வார்த்தான். இலட்சியம் ஈடேறப் பிறரை வருத்தல் -பிறரை அழித்தல் - முறையல்ல! கூடாது! கூடவே கூடாது! "கொலைவாளினை எட்டா; மிகு கொடியோர் செயல் அறவே!" என்றார் பாதிதாசன். கவிதையை உற்றுக் கவனியுங்கள்' கொடியோர் செயல் அறவே; கொலைவாளினை எடடா என்றாரே தவிர; கொடியோர் தலை அறவே கொலைவாளினை எட்டா எனக் கூறினார் இல்லை! சிலர் செயல் அறத் தான் அந்தச் சிங்க நாதம் செய்தார். அந்தச் சிங்கக் கூட்டத்தைத் தான் என் எதிரே காணு கின்றேன். இறும்பூதெய்துகின்றேன். கருமுகில் கண்டு திருமயில் ஆடுமென்பர். கதிரொளி கண்டு தாமரை மலருமென்பர், என் நிலையும் அது தான்! உமது விழியொளி கண்டு மகிழ்கின்றேன்-விடை பெற முடியாது பிரிகின்றேன்”