பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 பாகிஸ்தான் ஆக்ரமிப்புக் கண்டனம் "சிகாகோ பல்கலைக் கழகத்தில் அரசியல் கருத்தரங்கில் உரையாற்றுவதற்கு அன்பழைப்பு விடுத்த லாயிட் ருடால்ப் அவர்களுக்கும், சுசனே ருடால்ப் அவர்களுக்கும், பேராசிரியப் பெருமக்களுக்கும், மாணவ நண்பர்களுக்கும் என் நன்றியும் வணக்கமும் உரியதாகுக. அமெரிக்க நாட்டு சுற்றுப்பயணத்திற்கிடையே இந்தப் பல்கலைக் கழகத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். விவேகானந்தரின் பொன்மொழிகள் எதிரொலித்த நகரம் இந்த எழில்மிகு சிகாகோ நகரமாகும். அந்தப் பெருமைக்குரிய மனிதர் பிறந்த நாட்டிலிருந்து, அமைதி வழியில் விடுதலைப் போர் நடத்தி வெற்றிகண்ட காந்தி யடிகள் தோன்றிய நாட்டிலிருந்து, இருள் மிகுந்திருந்த தென்பகுதி யில் பகுத்தறிவு ஒளி பரப்பிய பெரியார் ராமசாமியும், அரசியலில் புதுவழி வகுத்த அறிஞர் அண்ணாவும் தோன்றிய நிலப்பரப்பி லிருந்து ஒரு பெரிய மக்கள் இயக்கத்தின் பிரதிநிதி என்ற முறையில் உங்களையெல்லாம் இந்த அரசியல் கருத்தரங்கில் சந்திக்கிறேன். "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என்று எச்சரிக்கை விடுத்த சிலப்பதிகாரம் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர் ஆண்ட நாடுகளின் அரசியல் சிறப்பை இன்னமும் விளக்கிக் கொண்டிருக்கிறது. அரசியலுக்கென ஒரு தனி அதிகாரமே வகுத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் நெறி கண்ட வள்ளுவரின் திருக்குறள் மணம் கமழும் நாடு நான் பிறந்த தமிழ்நாடு. அந்தப் புகழ்மிக்க மாநிலத்தின் நான்கு கோடி மக்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல் இருபது ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த ஒரு பெரிய கட்சியை ஜனநாயகப் போர்க் களத்தில் சந்தித்து ஆட்சி மாற்றத்தைச் செய்த சரித்திரம்