பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 325 என்னுடைய கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. அடிமை விலங்கொடிந்து ஆனந்த சுதந்திரம் வந்த பிறகும், எதிர்பார்த்த ஒளிமிகு வாழ்வு எங்கள் மக்களுக்குக் கிட்டவில்லை. ஆளவந்தவர்களிடம் காணப்பட்ட அக்கறையற்ற தன்மை அதற்கொரு காரணமாயினும் இந்திய நாடு அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடு என்பதை மறந்து விட முடியாது. ஆறு பிரேசில் நாடுகள் - ஒன்பது நைஜீரியாக்கள் - பதினைந்து எகிப்துகள்-கிட்டத்தட்ட மூன்று அமெரிக்க நாடுகள்- இந்த மக்கள் தொகையைக் கொண்டது இந்திய நாடு. அதற்காக மக்கள் தொகைக் கணக்கையும், அதன் சுமையை யும் கூறிக்கொண்டே பொறுப்புக்களைத் தட்டிக் கழித்து விடவும் கூடாது. எல்லாம் அவனவன் தலையில் எழுதியபடிதான் நடக்கு மென்று ஏமாற்றுகிறவன் கூற - அதனை ஏமாற்றப்பட்டவனும் ஏற்றுக்கொண்டிருந்த காலத்தை மாற்றி அந்தத் தலையெழுத்தைத் திருப்பி எழுத நாங்கள் எழுதுகோல் பிடித்திருக்கிறோம். அதில் இந்தியாவில் இப்போது தமிழ்நாடு முன்னணியில் நிற்கிறதென் றால் எங்கள் கட்சி மக்களிடம் உருவாக்கி வைத்திருக்கிற அரசியல் விழிப்புதான் காரணம். சாதாரண மக்களுக்குத் தொண்டு செய்திட அந்தஸ்து மிக்க குடும்பத்தினர்தான் பதவிப் பொறுப்புக்கள் ஏற்க வேண்டுமென்றிருந்த ஐதீகத்தை அறவே மாற்றி சாமான்ய மக்களுக்குத் தொண்டாற்ற சாமான்யமக்களின் மத்தியிலிருந்தே தலைவர்களைத் தோன்றச் செய்த பெருமை எங்கள் அரசியல் கட்சியின் அஸ்திவாரமாகஅமைந்த சுயமரியாதை இயக்கத்திற்கு உண்டு. பெரியாரின் சுயமரியாதை சுயமரியாதை இயக்கம் எங்கள் நாட்டு மனிதனின் கண்களைத் திறந்தது. அண்ணாவின் அரசியல் ஈடுபாடு அந்த மனிதனுக்கு ஜனநாயக உணர்வுகளைத் தெளிவுபடுத்தியது. பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கிற நீங்கள் எங்கள் இயக்க வளர்ச்சியைப்பற்றியும் இந்தப் பல்கலைக்