பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 நெஞ்சுக்கு நீதி கழகத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் காண நான் மகிழ்கிறேன். இந்தியாவின் முன்னாள் பிரதமர் பண்டித நேரு இந்தியா முழுமைக்கும் பரப்பிடத் தொடங்கிய ஜனநாயக ஒளி, தமிழகத் தில் முழுப்பிரகாசமாகத் திகழ்வதற்குக் காரணம், எங்கள் இயக்கம் பட்டிதொட்டிகளில் உள்ள ஏழை எளிய சாதாரண மக்களிட மும், கல்வி அறிவற்ற மக்களிடமும் ஜனநாயக தத்துவத்தை ஓயாமல் பிரச்சாரம் செய்வதுதான். தன் கையில் தரப்படுகிற வாக்குச் சீட்டின் சக்தியை ஒவ் வொரு குடிமகனும் இன்று உணர்ந்திருக்கிறான். அதனால் அரசாங்கத்தின் அச்சாணி; சட்டசபையிலோ, நாடாளுமன்றத்திலோ இருக்கிறது என்று அடையாளத்திற்காகச் சொன்னாலும் உண்மையிலேயே மக்கள் மத்தியில்தான் அந்த அச்சாணி இருக்கிறது. அவர்கள்தான் எங்களைத் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாக மாற்றியிருக்கிறார்கள். நாங்கள் போற்றிவரும் அரசியல் பண்பாடு நீண்ட காலமாகவே ஆளுக்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே உள்ள 'பலகை'யின் அகலத்தை வெகுவாகக் குறைத்திருக்கிறது. நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற நாலைந்து ஆண்டுகளில் தாழ்த்தப்பட்டுக் கிடக்கும் மக்கள் முன்னேற்றத்திற்கும், பின் தங்கிய மக்கள் நலனுக்கும் திட்டங்கள் வகுத்துச் செயல் படுகிறோம். பட்டிதொட்டியெல்லாம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங் கிடவும், மின்வசதி பெருக்கிடவும் தீவிரமாகச் செயல்படுகிறோம். பிச்சைக்காரர் மறுவாழ்வுக்கு நாங்கள் எடுத்துள்ள முயற்சி வேக மாக நடைபெறுகிறது. குடிசைகளை மாற்றி நல்ல வீடுகளைக் கட்டித் தருகிறோம். குடியிருப்பு மனைகள் சொந்தமில்லாமல் இருந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு அவைகளைச் சொந்த மாக்க சட்டம் செய்துள்ளோம். நிலமற்ற ஏழை எளியோர் மூன்று லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு நிலப்பட்டாக்கள் வழங்கியுள் ளோம். இலக்கியப் புகழும், வரலாற்றுப் புகழுமிக்க தமிழ் மொழி யின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கிறோம். இவைகளால் எல்லாம் நாங்கள் திருப்தி அடைந்து விட்டோமா என்றால் இல்லை. நேரு, ஒருமுறை கூறியது போல் கடைசியாக ஒரு ஏழையின் கண்ணீர் துடைக்கப்படும் வரையில் எங்கள் பணி முடிந்ததாக அர்த்தமில்லை.