பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி15 அவர் இருந்து செய்ய வேண்டிய அளவு காரியங்களை நானிருந்து ஆற்றிடுவேன் என்று நம்பிக்கை நாதம் எழுப்பும் அவரது கடிதம்-ஆம்; அந்த மணிக்கரம் தீட்டிய வார்த்தைகள் எனக்கு என் தெய்வமாம் அண்ணா அளித்த வரமல்லவா? அந்த வரம் பெற்றேன்! புதிய உரம் பெற்றேன்! அவர் கரம் பற்றி நடந்திட்ட எனக்கு அவர் கடைசியாக எழுதிய கடிதமும் ஒன்றுண்டு! தமிழக முதல்வர் பொறுப்பை ஏற்ற அண்ணா அவர்கள், இரண்டு ஆண்டுகள் முற்றுப் பெறுவதற்குள்ளாகவே புற்றுநோயால் நாக்குண்டதையும், அமெரிக்க நாட்டிற்கு சிகிச்சைக்குச் சென்றதையும், தமிழகம் திரும்பிய சில நாட்களுக்கெல்லாம் இயற்கை எய்தியதையும் முன்பே விபரமாகக் குறிப்பிட்டிருக்கிறேன். நியூயார்க் மெமோரியல் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிவுற்ற சில நாட்களுக்கெல்லாம் நோயின் கொடுமையான மரணப் பிடியிலிருந்து தப்பிவிட்டோம் என்ற மகிழ்ச்சி அவருக்கு ஏற்பட்டது. தாயகம் திரும்பி, தனது தொண்டினைத் தொடரலாம் என்ற உற்சாகத்துடன் அவர் இருந்திருக்கிறார். உடல் மிகவும் மெலிந்துள்ளார் என்றனர் அமெரிக்காவில் அவரைப் பார்த்துவிட்டு வந்தவர்கள். புற்றுநோயின் சேட்டைகள் எத்தகையவை என்பதை அண்ணா பல மருத்துவ ஆராய்ச்சி நூல்களைப் படித்து அறிந்து வைத்திருந்தார்! அவரது வீட்டிலேயே வயதில் இளமையான ஒரு அம்மையாருக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் பற்றியதால் அவர் இறந்துவிட்டார். அது முதல் புற்றுநோய் குறித்த மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படிப்பதில் அண்ணாவுக்கு ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அந்த நோயை ஆரம்பத்திலேயே உண்டுபிடித்து தடுத்து நிறுத்தி மக்களைக் காப்பாற்ற வேண்டும் அதற்கான ஆராய்ச்சி நிலையங்கள், மருத்துவமனைகள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட வேண்டுமென அவர் அடிக்கடி கூறிக் கொண்டிருப்பார். அப்போதெல்லாம் அந்தப் பொல்லாத நோய் அவரையே பிடித்துக் கொள்ளும் என்று யாருக்கும் தெரியாது. அவரது மறைவுக்குப் பிறகு அவரது எண்ணத்தை நிறைவேற்றிடத்தான் அண்ணா மறைந்த அடுத்த மாதமே காஞ்சிக்கு அருகாமையில் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையை அரசின் சார்பில் உருவாக்கிட முயற்சிகளை மேற்கொண்டோம்.