பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 329 அதற்கு பதிலடி கொடுக்கத் தக்கவிதத்தில் இந்தியா ராணுவ நட வடிக்கைகளை மேற்கொண்டது. டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியப்படைகளும், பாகிஸ்தான் படைகளும் நேரடி சண்டை யில் ஈடுபட்டன. வாஷிங்டனில் ஹம்ப்ரே அவர்களைச் சந்தித்தபோது வங்காளதேச பிரச்சினை குறித்து அவரிடம் விளக்கமாக எடுத் துரைத்தேன். உலக வங்கித் தலைவர் மாக்ன மாரா அவர்களைச் சந்தித் தேன். அயல்நாடுகளுக்கான அமெரிக்க உதவித் திட்டத்தின் நிர்வாகியான திரு. ஹன்னா அவர்களையும், கூப்பர் அவர்களையும் சந்தித்தேன். 3-12-71 அன்று இரவு குடியரசுத் தலைவர் வி.வி. கிரி அவர் கள் இந்தியா முழுவதும் அவசர நிலைமையை பிரகடனம் செய்தார். பாகிஸ்தான் விமானங்கள் ஸ்ரீநகர், அவந்திப்பூர், அமிர்தசரஸ், பதன்கோட், அம்பாலா, ஆக்ரா, ஜோத்பூர் ஆகிய நகரங்கள் மீது குண்டுகளை வீசின. இந்திய வீரர்கள் பீரங்கியால் சுட்டு அந்த விமானங்களை விரட்டினர். இந்தச் செய்தி கேட்டதும் நான் எனது சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு தாயகம் திரும்ப முடிவு செய் தேன். எனக்கு பெரிய வரவேற்பு கொடுப்பதற்கான அறிக்கை யினை துணைப் பொதுச் செயலாளராக இருந்த என்.வி.என். அவர்களும், சென்னை மாவட்டக் கழகச் செயலாளராக இருந்த நீலநாராயணன் அவர்களும் செய்திருந்தார்கள். அதனை அறிந்த நான் வாஷிங்டனிலிருந்து புறப்படுவதற்கு முன்பு தமிழக செய்தியேடுகள் மூலம் விடுத்த செய்தியில் "இந்தியாவில் தவிர்க்க இயலாத நிலையில் ஏற்பட்டிருக்கிற போர் சூழ்நிலையை இந்திய மக்கள் நெஞ்சுறுதியோடு சமாளிப்பார்கள் என்று நம்புகிறேன். இந்தியாவின் வெற்றிக்கு தமிழ் நாட்டு மக்கள் கட்சி சார்பற்ற முறையில் எல்லாவிதத் தியாகங்களையும் செய்யத் தயாராக இருக்க வேண்டுகிறேன் 5-ந் தேதி சென்னை வந்து சேருகிறேன். விமான நிலையத்தில் எனக்கு வரவேற்பு நிகழ்ச்சி எதுவும் வேண்டாமென்றும் யாரும் மாலை முதலியவை களை அணிவிக்க வேண்டாமென்றும் கேட்டுக்கொள்கிறேன்" என்று அறிக்கை விடுத்தேன். அன்று என்னை வரவேற்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்புக் கூட்டம் பாகிஸ்தான் ஆக்ரமிப்புக் கண்டனக் கூட்டமாக மாற்றப்பட்டது.