பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 நெஞ்சுக்கு நீதி பாதிக்கப்பட்டது என்று வாய் அலறாமல் இருந்து விடுவதில்லை. அதுபோல வடநாட்டில் ஒரு பாதிப்பு ஏற்பட்டாலும், தமிழ் நாட்டு வாய் கதறும், பதறும்" என்று கூறினேன். டிசம்பர் 12-ஆம் தேதியன்று கழகத்தின் தலைமைச் செயற் குழு சென்னையிலே கூடி, இந்தியா - பாகிஸ்தான் பிரச்சினையில் நியாயங்களைப் புறக்கணித்து அமெரிக்கா போன்ற அரசுகள் நடந்து கொள்ளும் போக்கிற்கு கண்டனம் தெரிவித்தும், இந்தியாவின் பக்கம் ரஷ்டா ரஷ்டா போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. தலைமைக் கழகத்தின் சார்பில் தமிழக அரசு திரட்டிய பாதுகாப்பு நிதிக்கு 25,000 ரூபாய் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. டிசம்பர் 7-ஆம் தேதியன்று வானொலியில் நான் ஆற்றிய "கொடி நாள்" உரையில் அறிவித்ததற்கிணங்க அந்தப் போரிலே மாண்ட தமிழகத்தைச் சேர்ந்த மாவீரர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஐயாயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. மேலும் நஞ்சையாக இருந்தால் ஒன்றரை ஏக்கரும், புஞ்சையாக இருந்தால் மூன்று ஏக்கரும் அவர்களது குடும்பத்தினருக்குத் தரப்பட்டது. மத்திய அரசின் அனுமத் யோடு வீர விருதுகளுக்கு அளிக்கப்பட்டிருந்த தொகையை அதிகமாக்கித் தந்தோம். பரம வீர சக்கரத்திற்கு பதினைந் தாயிரம் என்றும், மகாவீரச் சக்கரத்திற்கு பத்தாயிரம் ரூபாய் என்றும், சேனாபதக்கம் பெறுவோருக்கு மூவாயிரம் என்றும், இராணுவ அறிவிப்பு எனும் பாராட்டுப் பட்டியலில் இடம் பெற்றோருக்கு இரண்டாயிரம் ரூபாய் என்றும் உதவித் தொகை அளிக்கப்பட்டது. அப்படிப்பட்ட மாவீரீர்கள் தமிழகத்தைப் பொறுத்தவரையில் இரு நூறுக்கு மேற்பட்டவர்களாகும். இதையன்னியில் தமிழகத்தின் சார்பில் இந்தியாவின் போர் நிதி 1972-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களை தமிழகத்திற்கு அழைத்து வழங்கப்பட்டது. இந்த விழா சென்னை தீவுத் திடலில் நடை பெற்ற போது, நாட்டுப் பாதுகாப்பு நிதியாக ஆறு கோடி ரூபாயை தமிழகத்தின் சார்பில் பிரதமர் கையில் நான் வழங்கி னேன். அந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தின் ஆளுநர் கே. கே. ஷா அவர்கள் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு நான் வருவதற்கு முதல் இரண்டு நாட்கள் - மே 19, 20 ஆகிய நாட்களில் நீலகிரியில் நடைபெற்ற கழக மாநாட்டில் கலந்து கொண்டேன். 20-ஆம் தேதி இரவு