பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி335 பணயமாக வைத்து போரிட்ட வீரர்களை எல்லாம், இந்திய மண் போற்றிப் பாராட்டுகிறது" என்று கூறினேன். டெல்லியில் உள்ள வங்காள தேச தேச தூதர் ஆபீசில் பத்திரிகைத் தொடர்பு கலாசார அதிகாரியாகப் பணியாற்றிய அம்ஜாதுல் ஹக், சென்னைக்கு வந்து என்னைச சந்தித்துப் பேசினார். டெல்லி பாராளுமன்றத்திற்கு அடுத்தபடியாக தமிழக சட்டமன்றம்தான் வங்காள தேச வெற்றியைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்று கூறி அதற்காக நன்றி தெரிவித்து, என்னையும் வங்காள தேசத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். சுதந்திர வங்காள தேசத்திற்குப் பாராட்டு தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்மானத்தை அவையிலே டிசம்பர் 17-ஆம் தேதியன்று நான் கொண்டு வந்து அனைவராலும் ஆதரிக்கப்பட்டு நிறை வேற்றப்பட்டது. அதிலே நான் பேசும்போது கூறியதாவது: "சுதந்திரக் கொடியை வங்க தேச மக்கள் ஏற்றி வைத்த நேரத்தில் அதை ஏற்றி வைக்கக்கூட அவர்களுக்கு ஒரு இடம் இல்லை. வங்க தேசத்தில் எங்கோ ஒரு மூலையில், ஒரு மரத்தினடி யில் தங்களுடைய அரசை அவர்கள் உருவாக்கினார்கள். இவர் ஜனாதிபதி, இவர் பிரதமர், இவர் ராணுவத் தளபதி என்று பிரகடனம் செய்தபோது உலக நாடுகள் கேலிக் கண்களோடு அந்தக் காட்சியைப் பார்த்து ரசித்ததையும், இது எங்கே நடக்கப் போகிறது? புது நாடா? இது உருவாகுமா? என்றெல்லாம் கேட்ட தையும் யாரும் மறந்திருக்க முடியாது. இன்று அந்தப் படம் மாறி, அவர்கள் கிட்டத்தட்ட ஆறு கோடிக்கு மேற்பட்ட மக்களின் தளநாயகர்களாகப் பொறுப் பேற்றுக் கொண்டிருக்கிறார்கள். எங்கோ ஒரு இடத்தில் அவர் களாகச் சூட்டிக் கொண்ட முஜிபுர் நகர் என்ற இடத்தில் பறக்க விட்ட அந்தக் கொடி, இன்று வங்க தேசத்தின் தலைநகரமான- இந்திரா காந்தி அறிவித்ததைப் போல-சுதந்திர நாட்டின் சுதந்திரத் தலைநகரமான டாக்கா நகரில் பறக்க விடப்பட்டிருக் கிறது என்றால், புறக்கணிக்கப்படுகிறவர்களும், அலட்சியப் படுத்தப்படுபவர்களும், உரிமையின்றி நசுக்கப்படுபவர்களும், விடுதலை விரும்பிகளும் என்றைக்காவது ஒரு நாள் வெற்றியை நிச்சயம் பெற்றே தீருவார்கள் என்ற நம்பிக்கையை அகில