பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி339 திரு. மோகன் குமாரமங்கலத்தின் தூண்டுதலின் விளைவாக சில தொழிற்சங்கத் தலைவர்கள் டெல்லி சென்று பிரதமரிடம் முறையிட்டார்கள். அதன்பேரில் டெல்லி சர்க்கார் தொழிலாளர் மூலம் நல அமைச்சராக இருந்த காடில்கர் தொலைபேசி தொடர்பு கொண்டு, டெல்லிக்கு வந்திருக்கும் தொழிற்சங்கத் தலைவர்களையும், தமிழக தொழிலாளர் நல அமைச்சரையும் வைத்து சிம்சன் விவகாரம் குறித்து பேசவேண்டியிருப்பதால், தொழிலாளர் நல அமைச்சர் அவர்களை உடனே டெல்லிக்கு அழைக்கும்படி பிரதமர் இந்திரா கூறியிருப்பதாகத் தெரிவித் தார். அதற்கு உடனே நான் பதில் சொல்லாமல் இரவு 10 மணிக்கு மேல் மீண்டும் தொடர்பு கொண்டு பதில் கூறுவதாகக் கூறிவிட்டு, சென்னையிலே ஆயிரம் விளக்கு பகுதியிலே அன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கூடியிருந்த இலட்சக்கணக்கான மக்களிடம் சிம்சன் பிரச்சினை பற்றிய விவகாரம் முழுவதையும் விளக்கி, மத்திய அமைச்சரின் கட்டளையை ஏற்று தமிழக அமைச்சரை அனுப்பவேண்டுமா? வேண்டாமா? என்று கேட்டேன். மக்கள் அனுப்பத் தேவை யில்லை என்று கூறியதின்பேரில், அதனையே மத்திய சர்க்காருக்குப் பதிலாகத் தெரிவித்துவிட்டேன். இவ்வளவிற்கும் அங்கே தொழிலாளர்களின் பிரச்சினைகள் அனைத்தும் சமரச மாகத் தீர்க்கப்பட்டுவிட்டது. முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த காட்டூர் கோபால் அங்கே தலைவராக இருப்பது அவர் களுக்குப் பிடிக்கவில்லை. ஜனநாயக முறையிலே நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற முடியாமல், இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபட முற்பட்டார்கள். டெல்லிக்கு தமிழக அமைச்சரை அனுப்ப மறுத்த போதிலும், மத்திய அரசின் சார்பில் மாற்று யோசனைகள் தெரிவிக்கப்பட்டால், அது குறித்து ஆலோசிப்போம் என்று தெரிவித்தேன். சிம்சன் தொழிற்சங்கத்திற்கு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று மற்றவர்கள் கோரினார்கள். மார்ச் மாதம் முதல் வாரத்திலேயே தேர்தலை நடத்துவதற்கு நான் ஒப்புக்கொண்டேன. அதன் பின்னர் மத்திய அமைச்சர் காடில்கர் அந்தப் பிரச்சினையில் நான் காட்டிய ஆர்வத்திற்காக நன்றி தெரிவித்துக் கொண்டதோடு, மாநில அரசு விவகாரத்தில் தலையிடும் எண்ணம் டெல்லி சர்க்காருக்கு சிறிதளவும் இல்லை என்றும் தெரிவித்தார்.