பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34நெஞ்சுக்கு நீதி 10-1-72 அன்று இரவு சிம்சன் தகராறு குறித்து தொழிற் சங்கத் தலைவர்கள் பி. ராமமூர்த்தி, எம். கல்யாணசுந்தரம் அந்தோணிபிள்ளை, ராமானுஜம், மணிவர்மா, காட்டூர் கோபால் ஆகியோர் என்னைச் சந்தித்துப் பேசினார்கள். அமைச்சர்கள் நாவலர், என். வி. என்., மாதவன் ஆகியோர் அந்தப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டார்கள். அந்தப் பேச்சு வார்த்தையின் பயனாக உடன்பாடு ஏற்பட்டு சிம்சன் தொழிலாளர்கள் திரும்பவும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர். கழகத்தின் சார்பில் காட்டூர் கோபால் அங்கே வெற்றி பெற்றிருந்தபோதும்கூட, பெருந்தன்மையாக கழகம் அந்தப் பிரச்சினையிலே நடந்து கொண்டு, காட்டூர் கோபால் அவர்களைத் தொழிற்சங்கத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யச் செய்து அந்தத் தொழிற்சாலையில் அமைதி ஏற்பட கழகம் உதவியாக இருந்தது. இந்திரா பிரச்சிமையலே டந்து கொண்டு, அதுவரை காங்கிரஸ் தி.மு.கழகத்துடன் உறவு கொண்டிருந்தபோதிலும் சிம்சன் பிரச்சினைக்குப் பிறகும் மோகன் குமாரமங்கலம் அவர்களும், சி. சுப்பிரமணியம் அவர் களும் மத்திய அமைச்சர்களாக இருந்துகொண்டு தமிழகத்தில் வந்து மாநில அரசைப் பற்றி விமர்சித்துப் பேசுவதின் காரண மாகவும் கழகத் தோழர்கள் மத்தியில் அந்தக் கட்சியுடன் உறவு கொள்வது பற்றி கருத்து வேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்தன. அதன் காரணமாக 1972-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ந்தேதி தஞ்சையில் கழகத்தின் செயற்குழுவும், பொதுக்குழுவும் கூடியது. அந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:- "பிற்போக்கு சக்திகளை முறியடிக்க தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையில் அமைந்த முற்போக்கு கட்சிகளின் தேர்தல் உடன் பாடு, தேர்தல் வெற்றிக்குப் பிறகும், ஏற்றத் தாழ்வற்ற சமதர்ம சமுதாயத்தை உருவாக்க ஒன்றுபட்டு பாடுபடுகிறது எனினும், குறிப்பாக இந்திய தேசிய காங்கிரஸ் (இ.காங்கிரஸ்), இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆகிய இரண்டும், அண்மைக் காலமாக தி.மு.கழகத்திற்கு எதிராகக் கடைப்பிடிக்கும் போக்கும் மேடைப் பேச்சுக்களும், எழுத்துக்களும் கழகத்தினர் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை இப் பொதுக்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.