பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 நெஞ்சுக்கு நீதி சோஷலிசத்தை அடிப்படையாக வைத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தச் செயல் முறையைத் தடை செய்ய துணைக் கண்டப் பேரரசின் மூலம் சிலர் முயற்சிக்கிறார்கள். அவர்கள் அப்படி ஆசைப்படுகிறார்கள். எல்லோருக்கும் சரிசமமான உரிமை கொண்ட சமதர்மம் உருவாக வேண்டும் என்பதுதான் தி. மு. க. அரசின் கொள்கை. உள்ளன்புடனும், பாசத்துடனும், பண்புணர்ச்சியுடனும் திட்ட மிட்டுப் பணியாற்றி வருகிறது தி.மு.க. ஆட்சி. இதன் மீது கொண்ட அச்சம் காரணமாகத்தான் மாற்றார்கள் ஏசிப் பேச ஆரம்பித்துள்ளார்கள். தி.மு.க. ஆட்சியிலே ஊழல், ஊழல் என்று பேசி வருகிறார்கள். பக்தவச்சலனாரே கூட ஊழலைப் பற்றிப் பேசுகிறார். இப்படியெல்லாம் சொல்வதன் மூலம் தங்கள் கட்சியைப் பலப்படுத்திக் கொள்ளலாம் என்று அவர்கள் நினைக் கிறார்கள் போலும். அது ஒருக்காலும் அவர்களுக்கு நிறை வேறப் போவதில்லை. தி.மு.க.ஆட்சியில் குறைகள் நடக்கிறது என்றால் அது பற்றி இன்ன குறை நடக்கிறது என்று சொல்லுங்கள். யார் மீது குற்றம் என்று தெளிவாகச் சொல்லுங்கள். அதற்காக வழக்கு மன்றத்துக்கு வேண்டுமானாலும் செல்லலாம். இப்படி எல்லாம் செய்யாமல் சில பத்திரிகைகளைத் தூண்டிவிட்டு அவற்றிக்குப் பணம் கொடுத்துப் பொய் பிரச்சாரங்கள் செய்யச் சொல்வானேன். கழகத்துக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கு இப்படி எல்லாம் வழிகோலலாம் என்று சில குழப்பவாதிகள் நினைக் கிறார்கள். இங்கு குழப்பங்களை ஏற்படுத்த அனுமதிக்க மாட்டோம். தி.மு.க. மக்கள் கட்சி. இது தனி மனிதக் கட்சி அல்ல. அண்ணா அவர்கள் கழகத்தை உருவாக்கினார்கள். கலைஞர் அவர்கள் இதனைக் கட்டிக்காத்து வருகிறார்கள். கழகத்தைப் பிளவுபடுத்தச் சிலர் நினைக்கிறார்கள். அப்படி நினைப்போரின் நினைப்புக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். கழகத்தைப் பிளவுபடுத்த எவரும் பிறக்கவில்லை. இனிமேலும் பிறக்கப் போவதுமில்லை. பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த பிறகு முதலமைச்சர் பொறுப்புக்கு வருவது பற்றி நமது கலைஞர் என்ன சொன்னார் என்று இதுவரை நான் எந்த மேடையிலும் சொல்லவில்லை. இங்கே அதைச் சொல்லலாம் அவர்கள்