பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 புயல் புகுமுன்! 1972-ம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் நாள் சென்னை லாயிட்ஸ் காலனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழகப் பொருளாளர் எம்.ஜி.ஆர் ; கழகத்தை நேரடியாகத் தாக்கிப் பேசினார். கழகத்தின் மிக முக்கியமான பொறுப்பில் இருக்கக் கூடிய ஒருவர் செயற்குழுவிலோ பொதுக் குழுவிலோ தனது கருத்துக்களைச் சொல்லாமல் பொதுக் கூட்டமொன்றில் கழகத் தின் கட்டுப்பாட்டை மீறிப் பேசவேண்டிய திடீர் சூழ்நிலை எதுவும் ஏற்பட்டு விடவில்லை. எந்தக் கட்சியிலும்-ஏன்; இப் போது எம்.ஜி.ஆரைத் தலைவராகக் கொண்ட கட்சியிலேகூட அவரது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படுகிறவர்கள் அல்லது பேசுகிறவர்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக் கப்பட்டு "விலக்கி விட்டோம்" என்ற பெட்டிச் செய்திகளை வெளியிட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். சென்னைக் கூட்டத் தில் எம்.ஜி.ஆர். என்ன பேசினார், எப்படி நடவடிக்கை எடுக்கப் பட்டது என்ற விபரங்களைப் பிறகு பார்ப்போம். அவர் இப்படிப்பட்ட ஒரு கலவரத்தைக் கட்சிக்குள் ஆரம்பிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்புவரையில்கூட என்னைப் பற்றியும் கழகத்தைப் பற்றியும் எப்படி புகழ்ந்து கொண்டிருந்தார் என்பதை அறிந்து கொள்ளவேண்டியது மிக முக்கியம். "உலகம் சுற்றும் வாலிபன்" என்ற திரைப்படப் பிடிப்பிற் திரைப்படப்பிடிப்பிற் காக எம்.ஜி.ஆர். வெளிநாடு சென்றபோது நான் விமான நிலையம் சென்று அவரை வழியனுப்பி வைத்தது குறித்து "பொம்மை" என்ற பிரசித்தி பெற்ற கலைத்துறை இதழில் எம்.ஜி.ஆர். எழுதியிருந்த கட்டுரையின் ஒரு பகுதி இதோ: "அண்ணா அவர்கள் வந்திருந்து முன்பு மாலை அணிவித்த அதே விமானக் கூடத்தில் அண்ணாவைத் தேடினேன். அண்ணா இல்லை என்பது எனக்குத் தெரியாதா? நன்கு தெரியும்! ஆனாலும் உள்ளத்திலிருந்த எண்ணம் 'அண்ணா வந்து என்னை வாழ்த்தி வழியனுப்ப வேண்டுமே' என்பது! நான் அந்தப் பேராசையோடு சுற்றிலும் பார்த்தேன்!