பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 நெஞ்சுக்கு நீதி நடக்கும் விழாவுக்கு சென்னையிலே ஏன் போஸ்டர் ஒட்ட வேண்டுமென்று கேட்டேன்" என்றார். இப்படிப்பட்ட தலை வரைத்தான் சிலர் குறை கூறுகிறார்கள். அண்ணா அவர்கள் நம்மோடு இருந்து நம்மை சிந்திக்க வைத்தார். அதன்மூலம் கட்சியை வளர்த்தார். இன்று நமக் கெல்லாம் பதவியைத் தந்துவிட்டு மறைந்து விட்டார். அப்படிப் பட்ட பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னது என்னவோ -- நினைத்தது என்னவோ - அவர் உயிரோடு இருந்தால் எதை யெதைச் செய்வாரோ அவற்றையெல்லாம்கூட கலைஞர் அவர் கள் செய்து முடித்துக் கொண்டிருக்கிறார். அவரது உள்ளத்தில் இருக்கின்ற எழுச்சியைப் பற்றி அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருந்த போது நான் அறிந்தேன். கலைஞர் அவர்கள் உள்ளத்தில் கொண்டிருக்கின்ற எழுச்சி, தமிழர்களுக்குத் தனது கடமையைச் செய்யவேண்டும் என்கிற துடிதுடிப்பு அவருக்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அவர்கள் வாயிலாகவும் நான் அறிந்தேன். டாக்டர் கலைஞரின் திட்டம் - அண்ணா அவர்களின் கொள்கை-ஏழை எளியமக்களுக்கு உதவிகள் செய்யவேண்டும்- அவர்கள் வாழ்வு முன்னேற திட்டம் தீட்டப் பட பட வேண்டும் என்பதுதான். டாக்டர் கலைஞரின் அமைச்சரவை செய்து வருகின்ற நல்ல பல காரியங்களை எண்ணி எண்ணி நாடு மகிழ்ந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட நமது தலைவர் - முதல்வர் டாக்டர் கலைஞர் பல்லாண்டு வாழ வேண்டும் - பல்லாண்டு ஆள வேண்டும்." எம்.ஜி.ஆர். அவர்கள் "பாரத்" பட்டம் பெற்றமைக்காக தி.மு.க. தலைமைக் கழகச் சார்பில் 1972-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28-ஆம் தேதி நடைபெற்ற பாராட்டு விழாவில் நன்றி தெரிவித்து எம். ஜி. ஆர் பேசியதாவது:- "கலைஞர் அவர்களுக்கும் எனக்கும் உள்ள தொடர் பினைப் பற்றி இங்கே கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் எடுத்துக் கூறினார்கள். முரட்டுக் கதரைப் போட்டுக் கொண்டு கலைஞர் அவர்களை என் பக்கம் இழுக்க பக்கம் இழுக்க முயன்றேன் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் அதில் நான் அடைந்த தோல்வியை மகிழ்வோடு ஒப்புக் கொள்கிறேன்.