பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 கட்டுப்பாடு மீறிய காரியங்கள் 1972 ஆகஸ்டு 5, 6 ஆகிய நாட்களில் மதுரை மாவட்ட மாநாடு முரசொலி மாறன் தலைமையில் நடைபெற மாவட்டச் செயலாளர் நண்பர் மதுரை முத்து அவர்களால் ஏற்பாடுகள் தொடங்கப் பட்டன. மாநாட்டின் திறப்பாளர், மாணவர்களை இந்தி ஆதிக்கத்திற்கு எதிராகத் தட்டியெழுப்பிய அடலேறுகளில் ஒருவரான எல். கணேசன். அந்த மாநாட்டுக்குச் நாட்களுக்கு முன்பு கழகப் பொருளாளர் எம். ஜி. ஆர். அவர்கள் என்னை வந்து வீட்டில் சந்தித்தார். அந்தச் சந்திப்பில் அவர் முக்கியமாக ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசினார். சில் அவருடன் படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டி ருந்த ஒரு பெண்மணியைக் கழகத்தில் உறுப்பினராகச் சேர்க்க விரும்புவதாகவும், அந்தப் பெண்மணி மதுரை மாநாட்டுக்கு வரவேண்டுமென்றும்; மாநாட்டு மேடையிலேயே அந்தப் பெண் மணிக்கு முன்வரிசையில் இடம்தரவேண்டுமென்றும், அதுகுறித்து மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் மதுரை முத்து அவர்களுக்கு கழகத் தலைவர் என்ற முறையில் நான் கட்டளையிட வேண்டு மென்றும் எம்.ஜி.ஆர். வலியுறுத்தினார். "ஏ, அப்பா! திராவிடர் இயக்கம் இதையெல்லாம் தாங்காது- கொஞ்சம் பொறுமையாக இருந்து சிந்தியுங்கள்!" என நான் அவரிடத்தில் விளக்கமளித்தேன். தெரியாதா "நண்பர் முத்து அவர்களை உங்களுக்குத் என்ன --உங்களுக்குத் தங்க வாள் பரிசளிப்பு விழா நடத்திய வராயிற்றே; அதனால் அவரிடமே இதுகுறித்துப் பேசுங்கள். அவரும் என்னைப்போலவேதான் கருத்து சொல்வார். ஒத்துக் கொள்ள மாட்டார்!" என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தேன். எம்.ஜி.ஆர். அவர்கள் பிரச்சினையை அத்துடன் விடாமல் மதுரை முத்து அவர்களுக்கே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரிடம் பேசியிருக்கிறார். முத்து அவர்கள் எம்.ஜி.ஆரிடம் மிகவும் கண்டிப்பாக "அப்படியெல்லாம் யாரை யும் அழைத்து வந்து மேடையில் உட்காரவைப்பதென்றால் அவர்களை மாநாட்டுப் பந்தல் முகப்பிலே நிறுத்திவிடுவேன்-