பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 357 அந்த மாநாட்டில் கலந்து கொண்டார் எம்.ஜி.ஆர். ஆனால் அவர் எண்ணம் ஈடேறாத மனக் குறையுடன் கலந்து! கொண்டார்! பின்னணியில் மத்திய அரசின் மிரட்டல்கள்! எங்களுக்கு இதெல்லாம் அப்போது இவ்வளவு அப்பட்டமாகத் தெரியாது! ஏதோ எங்கிருந்தோ ஒரு சதி உருவாகிறது என்பது மட்டும் மின்னல் கீற்றுப் போலத் தெரிந்ததே தவிர, விவகாரங் கள் முழு வெளிச்சத்திற்கு வரவில்லை. துரோகம் செய்யத் துணிந்து விட்டவர்கள், தங்களைப் பூரணமான விசுவாசிகளாகக் காட்டிக் கொள்வார்கள் அல்லவா? ஏசுநாதருக்குத் துரோகம் செய்த ஜூடாஸ் கூட அப்படித் தானே கடைசி நேரத்திலும் நடந்து கொண்டான்! மதுரை மாநாட்டில் எம். ஜி. ஆரின் பேச்சு எம்.ஜி.ஆரின் மத்திய அரசுக்கு எதிரான போர் முழக்கமாக இருந்தது! கழக கழக அரசு தூய்மையானது என்று அழுத்தம் திருத்தமாகப் பேசினார்? 'காங்கிரசார் இதனை ஊழல் ஆட்சி என்கிறார்களே; ஊழல் ஆட்சியா இது?" என்று பொதுமக்களைப் பார்த்து மாநாட்டில் கேட்டார்! "இல்லை! இல்லை! என்ற பதில் முழக்கம் விண்ணைப் பிளந்தது! மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு - இது ஊழல் ஆட்சி அல்ல!" என்று முடிவு கூறினார். மிக மிக விசுவாசி போலக் காட்டிக்கொண்ட அவர் மத்திய அரசை எப்படித் தாக்கிப் பேசி-மாநில சுயாட்சிக்காக முரசு கொட்டினார் என்பதையும் பார்ப்போம்! இதோ அந்தப் பேச்சின் ஒரு பகுதி:- ஏதோ இந்த அரசை கவிழ்க்க வேண்டும் என்று யாரோ முயற்சி செய்வதாக நண்பர்கள் எல்லாம் சொன்னார்கள். இதுவரை நான் பேசாத பேச்சை பேச்சை - சொல்லாத சொல்லை இப்போது சொல்லும்படி அவர்கள் தூண்டிவிட்டிருக்கிறார்கள். அடுத்து நியாய பூர்வமாக எந்த ஆண்டில் தேர்தல், நடைபெற வேண்டுமோ அப்போது நடவாமல் அதை மீறி இடையில் தேர்தல் நடக்கும் நிலை உருவாக வேண்டும் என்று விரும்புவார்களானால்-மோகன் குமாரமங்கலமோ, சி. சுப்பிரமணி யமோ அதற்குத் தூண்டிவிட்டிருந்தால், தாய்மார்களே, பெரியோர்களே, கழகத் தோழர்களே, நீங்கள் அதை அனுமதிக்கப் போகிறீர்களா? அப்படி ஒரு சூழ்நிலை தோற்றுவிக்கப்படுமானால் மறுவினாடி ராணுவத்தையே தமிழ்நாடு சந்திக்கும்.