பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 நெஞ்சுக்கு நீதி ☐ கூட்டத்தில் பிரதமர் இந்திரா காந்தி, தந்தை பெரியார், மூதறிஞர் இராஜாஜி, சிலம்புச் செல்வர் ம.பொ.சி., காயிதே மில்லத் இஸ்மா யில் சாகிப், ஆந்திர முதல்வர் பிரமானந்த ரெட்டி, டாக்டர் ஏ. லெட்சுமணசாமி முதலியார், ராஜா முத்தையா செட்டியார், ஏ.எஸ்.கே. அய்யங்கார், பி. இராமமூர்த்தி, சென்னை மேயர் வேலூர் நாராயணன், மூக்கையா தேவர், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் தினேஷ்சிங், சி.சுப்பிரமணியம், ஷெரீப் சுந்தர்லால் நகாதா, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., மற்றும் நான், நாவலர் நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோர் கலந்துகொண்டு கண்ணீர்த் துளிகளால் எழுதப்பட்ட இரங்கல் தீர்மானத்தை மக்கட் பெருங் கடலின் பெருமூச்சுக்கிடையே நிறைவேற்றி னோம். அண்ணாவின் மறைவுச் செய்தி கேட்டதும் தலைவர்கள் எப்படித் துடித்தனர் - தமிழகம் எப்படித் தவித்தது என்பதை எழுதிக் காட்ட வார்த்தைகளைத் தேடுகிறேன்; கிடை க்க வில்லை! . "நடுநிசிக்குப்பிறகு அண்ணாவின் மறைவுச் செய்தி கேட்டு நான் விழித்தேன். எனது துயரம் வார்த்தைகளில் அடங்காது" என அறிக்கை விடுத்தார் ராஜாஜி! எத்தனையோ பிரச்சினைகளில் அண்ணாவுக்கும் ராஜாஜிக் கருத்து மோதுதல்கள் கடுமையாக ஏற்பட்ட துண்டு! 1937- ஆம் ஆண்டுகளில் சென்னை ராஜதானியை ஆளுகிற பிரதமர் பொறுப்பை ஏற்றிருந்த ராஜாஜி அவர்கள் இந்தி மொழியைப் பள்ளிகளில் கட்டாயப்பாடமாக ஆக்கியபோது இந்தி எதிர்ப்புத் தளபதியாகப் பெரியாரால் நியமிக்கப்பட்டு ஆறு மாதம் சிறைத் தண்டனை பெற்றவர் அண்ணா! 1952-ல் ராஜாஜி ஆட்சி கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்து, ராஜாஜி வீட்டு வாசலி லேயே மறியல் களம் அமைத்தவர் அண்ணா! தி.மு.கழகத்தை மூட்டைப் பூச்சி என வர்ணிதது அதை நசுக்கி விடுவேன் என்று கர்ச்சித்தவர் ராஜாஜி! அவரது அரசியல் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளாமல் ராஜாஜியை "குல்லுகபட்டர்” என்று குறிப் பிட்டவர் அண்ணா! இந்தக் கடந்தகால நிகழ்ச்சிகளையெல்லாம் 1967-ல் அதே ராஜாஜியும், அண்ணாவும், காயிதேமில்லத்தும். மூக்கையாதேவரும், காங்கிரசை எதிர்த்து ஒரே அணியில் நின்றனர். மறந்து பி. ராமமூர்த்தியும். LO பொ.சி.யும்