பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி359 "திருக்கழுக்குன்றத்தில் பேசுகின்ற நேரத்தில் எனக்கு என்ன உணர்ச்சி ஏற்பட்டதோ-என்ன என்ன பேச வைத்தார் களோ-அதே சூழ்நிலையைத்தான் நான் இங்கு காண்கின்றேன். அண்ணா அவர்களுடைய உருவச் சிலையை அங்கே திறந்து வைத்துவிட்டு-பேசிவிட்டு வந்திருக்கிறேன். ஆகவே அண்ணா அவர்களைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறேன். அண்ணாவின் அனுமதியோடு நான் பேசுகிறேன். யாரோ சொன்னார்கள்-மதுரை முத்து இந்திரா காங்கிரசில் சேர்ந்து விட்டார்கள் என்று! நான் கேட்டேன்-முதலமைச்சர் கருணாநிதி இன்றைய தினம் மதுரையில் அவரைப் பாராட்டுவதாக இருந்ததே என்றேன். என்னமோ தெரியவில்லை. வியாபாரம் இங்கே நடக்க வில்லை. அங்கேதான் நடக்கும் என்று போய் விட்டதாகச் சொன்னார்கள். விவரம் 15-ந் தேதிக்குப் பிறகுதான் தெரியும். இப்படிக் குழப்பி விடுவதில் சில உண்மைகள் வெளிவரும். “எம். ஜி. ஆர். என்றால் தி.மு.க."-"தி.மு.க. என்றால் எம்.ஜி.ஆர்." என்று சொன்னேன். உடனே ஒருவர்-நாங்கள் எல்லாம் தி.மு. க. இல்லையா? என்று கேட்டார். நான் சொல் கிறேன். நீயும் சொல்லேன். உனக்கும் உரிமை இருக்கிறது. எனக்கும் உரிமை இருக்கிறது. உனக்கு துணிவில்லாததால் என்னைக் கோழை ஆக்காதே! உனக்கு துணிவிருந்தால், நான்தான் தி. மு.க. என்று சொல்! நான் மறுக்கவில்லை. நான் 'மட்டும்' தி. மு.க. என்றால் தான் கேள்வி! இதைக்கூட புரிந்து கொள்ளாத தமிழர்கள் கட்சி யில் வந்து மாட்டிக் கொண்டார்களே என்பதை நினைத்து அனுதாபப்படுகிறேன். இந்தப் பிரச்சினைகள் எல்லாம் தேவையற்ற பிரச்சினைகள். மதி பேசுகையில் நான் கலைத்துறையில் பணியாற்றுவதோடு இன்னும் கொஞ்சம் அதிகமாக அரசியலில் பங்கு கொள்ள வேண்டும் என்று சொன்னார். இவ்வளவு கொஞ்சமாக அரசியலில் பங்கு கொள்வதையே சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லையே! இன்னும் அதிகமாக ஈடுபட்டால் எல்லோருக்கும் என்ன ஆகுமோ? பரிதாபத்திற்குரிய வர்கள்! முன்பொரு முறை சொன்னேன், காமராசர் அவர்களை தலைவர் என்று! அண்ணாவை வழிகாட்டி என்று சொன்னேன்.