பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 திகைக்கவில்லை தித்திப்பு வழங்கினார்! கடற்கரைக் கூட்டத்தில் காரசாரமாகவும், கடுமையாகவும் கழக முன்னணியினர் பேசிய பிறகு இறுதியாக நான் பேசினேன். அந்த நீண்ட உரையில் சில பகுதிகளை நினைவூட்ட விரும்பு கிறேன். "பல தீர்மானங்கள் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி நிறைவேற்ற வேண்டிய தி.மு.கழகம் அவைகளை எல்லாம் இன்று மறந்து விட்ட நிலையில் சில பிரச்சினைகள் நாட்டிலே உருவாகியிருக்கின்றன. அதுதான் என்னுடைய இனிய நண்பர்-அன்றும் இன்றும் சரி, என்றும் நான் அவரை இனிய நண்பர் என்றுதான் அழைப்பேன்-அந்த புரட்சி நடிகர் எம். ஜி. ஆர். திடீரென்று தி.மு. கழகத்தின் மீது நடத்திய தாக்குதல்கள் முன்னேற்றக் கழகத்தில் இருக்கிற இலட்சக்கணக்கான தொண்டர்களுடைய நெஞ்சம் துடிக்கின்ற அளவிற்கு, 18,000கிளைக் கழகச் செயலாளர் களுடைய நெஞ்சம் பதறுகிற அளவிற்கு 135 வட்டச் செயலாளர்களுடைய உள்ளம் ம் உருகுகின்ற அளவிற்கு - 14 அடைகிற அளவிற்கு- செயற்குழு, பொதுக்குழு இப்படிப்பட்ட ஒரு நிலை உருவாகி விட்டதே என்று வேதனைப்படுகிற அளவிற்கு கொந்தளிக்கிற அளவிற்கு சில காரியங்களில் என் இனிய நண்பர், புரட்சி நடிகர் அவர்கள் ஈடுபட்டு விட்டார். செயற்குழு சியலாளர்கள் பதட்டம் - - கணக்கு கேட்டார் எம். ஜி. ஆர்., ஆகவே கழகத்தை விட்டு விலக்கி விட்டார்கள் என்று மாற்றுக் கட்சிக்காரர்கள் பேசுகிறார்கள். எனக்கொரு மகிழ்ச்சி. எந்தப் பத்திரிகையிலே எம்.ஜி.ஆர். அவர்கள் கிண்டல் செய்யப்பட்டு எழுதப் பட்டாரோ-அந்தப் பத்திரிகைகள் எல்லாம் இன்று எம்.ஜி.ஆர் அவர்களைத் தூக்கிவைத்துக் கொண்டு பாராட்டுகின்ற காட்சியைப் பார்த்து எனக்கொரு மகிழ்ச்சி. "பாரத் பட்டம் எப்படி வந்தது? யார் சிபாரிசு செய்தார்கள்?" என்று கேட்ட பத்திரிகைகள் எல்லாம் இன்று பாரத் எம்.ஜி. ஆர் என்று எழுதுகின்ற நிலைமையை உருவாக்கி யிருக்கிறார் என்பதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.