பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 385 வேண்டாததைச் சொல்லிக் சொல்லிக் கழகத்தை விட்டு வெளியேறி விட்டால் அல்லது வெளியேற்றப்பட்டு விட்டால் மத்திய சர்க்காருக்கு நல்ல பிள்ளையாகி விடலாம் என்ற நினைப்போடு எம்.ஜி.ஆர். அவர்கள், கடற்கரைக் கூட்டத்திற்குப் பிறகு தனிக்கட்சி தொடங்குவதிலே ஆர்வம் காட்டத் தலைப்பட்டார். அந்த முயற்சிக்கு மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலம் அவர்களின் முழுமையான தூண்டுதல் இருந்தது. குமார மங்கலத்தின் தூதுவர்களும் சென்னையில் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் முகாமிட்டு அவரை உசுப்பி விட்டுக்கொண்டி ருந்தார்கள். புதிய கட்சிக்குப் பெயர், கொடி இவற்றை யெல்லாம் கூட மோகன் குமாரமங்கலம் அவர்களால் அனுப்பப் பட்ட சில முக்கிய பிரமுகர்கள் தான் எம்.ஜி.ஆருக்கு வகுத்துக் கொடுத்தனர். திராவிடர் இயக்கத்தைப் பிளக்க இப்படியொரு சூழ்ச்சி நடைபெறுவதைக் கண்டும் கேட்டும் தந்தை பெரியார் அவர்கள் வெகுண்டெழுந்து 24-10-72 அன்றைய விடுதலை இதழில் ஒரு தலையங்கம் எழுதினார். அந்தத் தலையங்கத்தின் சில பகுதிகள் எம்.ஜி.ஆரின் அந்தப் போக்கிற்கான காரணத்தை நாட்டுக்கு அம்பலமாக்கின. பெரியார் அவர்கள் அக்டோபர் 24-ஆம் நாள் விடுதலையில் எழுதிய தலையங்கப் பகுதிகள் வருமாறு:- "எம். ஜி. ஆர். ஒரு சினிமாக் கலைஞர். அந்தத் துறை யில் எனக்கு அனுபவம் இல்லை என்பதோடு வெகு கால மாகவே நான் சினிமா பார்ப்பதில்லை. கலைத்துறைகள் என்பவை முழுதும் ஒரு சாரார் ஆதிக்கத்திலும் அவர்கள் கைவசத்திலும் இருந்து வந்ததானது. நமது ஆசையின்படி கொஞ்சம் கொஞ்சமாக மாறி நம்மவர்கள் கைக்கு வர நேர்ந்ததை முன்னிட்டும் நான் நமது கலைஞர்களைப் பாராட்ட வும், அவர்கள் வளர்ச்சிக்கு பாடுபடவும், விளம்பரம் ஏற்படவும் முயற்சித்து இருக்கிறேன். என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களை வெளிப்படையாகவே பாராட்டியிருக்கிறேன். சிவாஜிகணேசன் அவர்களையும் நான் நாடகத்தில் பாராட்டியிருக்கிறேன். எம்.ஜி.ஆர். அவர்களை எனக்கு அவர் யார் என்றும் அவர் நிலை எது என்றும் ஒன்றுமே தெரியாது. சில திருமண நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன். சில தி.மு க நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன்.