பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி - 391 இருக்கிறார்கள். என் கட்சியில் சேர்ந்துள்ள தி.மு.க. தலைவர் களைப் பற்றி சந்தேகத்திற்கு இடமில்லை. அவர்கள் புதுக் கட்சியில் சேர்ந்த போது அவர்களுடைய சொத்து எவ்வளவு, கடன் எவ்வளவு என்று எங்களுக்குத் தெரியும். சேர்த்திருக்கிறார்களா என்று ஒரு ஆண்டு கழித்து மறுபடியும் மேலும் பணம் விசாரணை நடத்துவோம்" என்றார். சட்டப் பேரவைத் தலைவர் மதியழகன் அவர்களை எம்.ஜி.ஆர். சென்று பார்ப்பதும், எம்.ஜி.ஆரை, மதியழகன் சென்று பார்ப்பதுமாக இருந்தார்கள். நவம்பர் 10-ந் தேதியன்று அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து நடத்திய ஊர்வலத்தை பேரவைத் தலைவர் மதியழகன் அவர்கள் அண்ணா சாலையில் ஒரு இடத்திலிருந்து பார்வையிட்டார். இந்தக் காரணத்தினால் தமிழகச் சட்டப் பேரவை நவம்பர் 13-ஆம் தேதி கூட்டப்படும் போது பேரவைத் தலைவர் எந்த முறையில் நடந்து கொள்வாரோ என்பது தமிழக அரசியலில் ஒரு பெரிய கேள்விக்குறியாக இருந்தது. 13-ந் தேதி காலையில் பரபரப்பான சூழ்நிலையில் சட்டப் பேரவை கூடியது. அனுதாபத் தீர்மானம் முதலில் முடிந்து பேரவையின் தலைவர் அவர்கள் ஒரு அறிவிப்பினையும் செய்த பிறகு-முறைப்படி நிகழ்ச்சி நிரல்படி கேள்வி நேரம்! கேள்விகளை பேரவைத் தலைவர் எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக அந்த நேரத்தில் ஒழுங்குப் பிரச்சினைகள் எழுப்பப் படுமானால். அவைகளுக்கு பேரவைத் தலைவர் அனுமதியே வழங்கிடக் கூடாது. ஆனால் அன்று நடைபெற்றது என்ன? கேள்வி நேரம் தொடங்குவதற்கு முன்பு இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் கே. டி. கே. தங்கமணி அவர்கள் எழுந்து ஒரு ஒழுங்கு பிரச்சினை எழுப்ப விரும்புவதாகக் குறிப்பிட்ட போது. கழக உறுப்பினர் ஒருவர் கேள்வி நேரத்தின் போது ஒழுங்குப் பிரச்சினைக்கே இடமில்லையே என்றார். இருந்தாலும் பேரவைத் தலைவர் அதற்கு அனுமதிக் காமல், "தங்கமணியைப் பார்த்து ஒழுங்கு பிரச்சினை என்ன?" என்று கூறும்படி அனுமதித்தார். உடனே தங்கமணி அவர்கள் கடந்த சட்டப் பேரவைக்குப் பிறகு பல நிகழ்ச்சிகள் நடைபெற்றிருப்பதாகவும், அப்போது விவசாய அமைச்சராக இருந்த அன்பில் தர்மலிங்கம்