பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 நெஞ்சுக்கு நீதி ஏற்பட்டது. முதலில் உடலை மண்டபத்தின் வெளி முகப்பில் வைக்காமல் உள்ளேயுள்ள கூடத்தில் வைத்தது பெருந் தவறாகப் போயிற்று. கூட்ட நெரிசலில் நான்கைந்து பேர் உயிர் இழந்தனர். மண்டபத்தைச் சுற்றி அரசினர் தோட்டம் முழுமையும் நிரம்பி வழிந்த கூட்டத்தினர், அண்ணாவின் உடலை மண்டபத் தின் உச்சிக்குக் கொண்டுவந்து காட்டுங்கள் என்று அழுகுர லுடன் முழங்கினர். அதற்குள் மண்டபத்தின் உட்பகுதி "சீலிங்' உடைந்து நொறுங்கி எங்கள் மீது கற்கள் விழத் தொடங்கின. மண்டபத்திற்குள்ளே அண்ணாவின் உடலைச் சுற்றி நின்று அந்த உடலுக்குச் சேதம் வந்துவிடாமல் பாதுகாக்கப் போலீ ாருடனும், தொண்டர்களுடனும், நான், சத்தியவாணிமுத்து, ப.உ. சண்முகம், ஈரோடு சின்னச்சாமி, துரை முருகன் ஆகியோர் இருந்தோம். போலீஸ் ஐ.ஜி., மகாதேவன், மற்ற அதிகாரிகளுடன் அந்த மண்டபத்திற்குள்ளே மக்கள் வெள்ளம் கரை புரண்டு வந்துவிடாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவரிடம் கதறிக்கொண்டே சொன்னேன் “எப்படியாவது அண்ணாவின் உடலைப் பாதுகாத்திடுங்கள்" என்று! . திறந்து அதற்குள் அடைபட்டிருந்த கதவுகளை மதயானைகள் முட்டித் திறந்தது போல வெளியிலிருந்த கூட்டம் விட்டது. முருகேசன் என்ற ஒருவர்! வாட்டசாட்டமான உருவம்! லுங்கி கட்டியிருந்தார் - பனியன் போட்டிருந்தார் -அண்ணா உடலருகே வந்து "அய்யோ அண்ணா!" என்று அலறினார். அப்படியே விழுந்தார். விழுந்தவரை நாங்கள் தூக்கினோம். உயிர் போய்விட்டது. அந்தப் பாசமுள்ள கழகக் கண்மணியின் சவத்தை எங்கே கொண்டு செல்ல முடியும்? அந்தக் கூட்டத்தில் எப்படி வெளியே கொண்டு போக முடியும்? தலைவன் செத்ததற்கு செத்த அந்தத் அந்தத் தங்கத்தை மண்டபத்தின் ஒரு மூலையிலே கிடத்தினோம். ' . அந்த அண்ணாவின் உடலை நானும், ப.உ. சண்முகமும், ஈரோடு சின்னச்சாமியும், சத்தியவாணிமுத்துவும், துரை முருகனும் ஓரிரு போலீஸ் அதிகாரிகளும் தொண்டர்களும் சுமந்துகொண்டு ராஜாஜி மண்டபத்தின் உச்சி மாடிக்கு எடுத்துச் சென்றோம். எங்கள் கரங்களிலும், எங்கள் தோள்களிலும் எங்கள் அண்ணனின் உடலைச் சாய்த்துப் பிடித்து கொளுத்துகின்ற வெயிலில் எதிரில் கூடியிருந்த மக்கள் சமுத்திரத்திற்குக் காட்டினோம்.