பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 நெஞ்சுக்கு நீதி ஆனால் நாட்டில் இன்று ஒரு பதட்டமான அசாதாரண நிலை உள்ளது. சட்டம், அமைதி, ஒழுங்கு இல்லை. மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை. இன்று அசாதாரண நிலை உள்ளது. மாநிலத்தில் கடந்த ஒரு மாத காலமாக நடக்கும் நிலை சாதாரணமானவைகளாக இல்லை. அசாதாரண நிலைகளே நிலைகளே உள்ளன. இப்பிரச்சினைக்கு பரிகாரம் டெல்லியில் இல்லை. கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையிலும் இல்லை. முதலமைச்சர் தான் பெரிய மனது வைத்து பொது மக்களைச் சந்தித்து அவர்கள் ஆதரவைப் பெற வேண்டும். சென்ற ஆண்டு எப்படி நாலாவது வருடத்திலேயே சட்ட சபையைக் கலைத்து மக்களைச் சந்தித்து வாக்குகளைப் பெற்றாரோ அதே போல இன்று மாநிலத்தில் தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலைக்குத் தீர்வு காண சட்டசபையைக் கலைக்கும்படி கவர்னருக்கு முதலமைச்சர் சிபாரிசு செய்ய வேண்டும் என்ற என்னுடைய யோசனையைத் தெரிவித்துக் கொள்கிறேன். சட்ட சபையைக் கலைத்து மறு தேர்தலுக்கு நின்று மேலும் மக்கள் ஆதரவுடன் மீண்டும் வரலாம் என்பது என்னுடைய யோசனை. எனவே மக்களை இன்றைக்கே சந்திக்கிறீர்களா என்று எம் ஜி.ஆர்.கேட்கிறார். அதற்கு முதலமைச்சர் ஏதேனும் பதில் சொல்ல விரும்புகிறாரா?" என்று சபாநாயகர் மதியழகன் அவர்கள் கேட்டபோது, நான் எதுவும் பதிலே சொல்ல விரும்பவில்லை என்பதை சைகை மூலமே காட்டி விட்டேன். இந்த நிலையில் திடீரென்று சபாநாயகர் கே.டி. கே. தங்க மணியும் (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி) பொன்னப்ப நாடாரும் (காங்கிரஸ்) தெரிவித்த யோசனையை ஏற்றுக் கொண்டு சபைக் கூட்டத்தை டிசம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருப்பதாக அறிவித்து விட்டு அறைக்குச் சென்று விட்டார். சட்டப்பேரவைத் தொடர்கூட்டமாக நடைபெறும் என்று நினைத்து வெளியூரிலிருந்து வந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் எல்லாம் ஒரே நாளோடு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது அறிந்து பேரவைத் தலைவர் அவர்கள்பால் மிகுந்த ஆத்திரம் கொண்டனர். அவர்களை எல்லாம் அமைதியடையச் செய்ய மிகுந்த நேர மாயிற்று. பொதுவாக 13-11-72 அன்று கூடிய தமிழக சட்டப் பேரவை வரலாறு காணாத நான்கு நிகழ்ச்சிகளை முதன்முறை யாகக் கண்டது. அவை: