பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 395 1. கேள்வி நேரமே எடுத்துக் கொள்ளப்படாமல், ஒழுங்குப் பிரச்சினை ஒன்றைப் பற்றி மட்டுமே ஒரு மணி நேரம் விவாதம் நடைபெற்று திடீரென்று சபை ஒத்தி வைக்கப்பட்ட நிகழ்ச்சி; அதற்கு சபாநாயகர் உடந்தையாக இருந்தது! 2. எதிர்க்கட்சித் தலைவர்களின் யோசனையை ஏற்று சட்ட சபை கூட்டத்தை சபாநாயகர் ஒத்தி வைத்த நிகழ்ச்சி; 3. ஆட்சியின் போக்கைக் கண்டித்தும், குறை கூறியும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டதாக கருத்து தெரிவித்து ஆளுங் கட்சியை தேர்தலில் மீண்டும் போட்டியிட சபாநாயகர் இருக்கையில் இருந்தவாறு யோசனை கூறிய நிகழ்ச்சி. 4. சட்டசபை தொடர் கூட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, முதல் நாளோடு சபாநாயகர் தன்னிச்சையாக ஒத்தி வைத்த நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி நடைபெற்ற அன்று மாலை சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. தோழமைக் கட்சி யினரான இந்தியயூனியன் மூஸ்லீம் லீக், பார்வர்டு பிளாக், தமிழரசு கழகம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்து •கொண்டார்கள். "நாங்கள் எல்லாம் தங்களிடம் முழு நம்பிக்கை வைத்து ஏகமனதாக பேரவைத் தலைவராக தங்களைத் தேர்ந்தெடுத்தோம். எங்கள் நம்பிக்கை வீணாகும் வண்ணம் அண்மைக் காலத்தில் ஜனநாயக பாரம்பரியத்திற்கு விரோதமாக தாங்கள் நடந்து கொண்டது கண்டு வருந்துகிறோம். தங்கள் மீது நம்பிக்கை இழந்து விட்டோம். ஆகவே தாங்கள் சட்டப்பேரவைத் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று இதன் மூலம் கேட்டுக் கொள்கிறோம்' என்று சட்டப் பேரவையில் உள்ள எல்லா அமைச்சர்களும், தி.மு.க., மூஸ்லீம் லீக், பார்வர்டு பிளாக், தமிழரசு கழகம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களுமாக மொத்தம் 182 பேர் கையெழுத்திட்டு மதியழகன் அவர்களுக்கு அனுப்பப்பட்டது. பேரவையின் தலைவர் திடீரென்று டிசம்பர் 5-ஆம் தேதி வரை அவையை ஒத்தி வைத்து விட்ட காரணத்தால்- திரும்பவும் சட்டமன்றத்தைக் கூட்டுவதற்கு சட்ட ரீதியாக என்ன வழி என்று ஆராய்ந்து, அதன்படி தமிழ்நாடு சட்ட மன்றத்தின் இருசபைகளின் அப்போதைய கூட்டத் தொடர் முடிவுற்றதாக (புரோ ரோக்) கவர்னர் அவர்கள் மூலமாக மாநில அரசின் ஆலோசனையின் பேரில் அறிவிக்கப்பட்டது.