பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதை: அண் ண்ணா திராவிட முன்னேற்றக் - கழகமென்று கொடியிலும் அண்ணாவின் பெயரால் கட்சிக்குப் பெயர் அண்ணாவின் உருவம்-ஆனால் அண்ணா அவர்கள் கட்டிக் காத்த சட்டமன்ற ஜனநாயக மரபுகளை வெட்டிப் பிளக்கும் காரியத்தில் அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும் அவருடன் சுமார் பத்து பேர் அவரது கட்சியில் சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர்களும் ஈடுபட்டார்கள். - - இன்றைக்கு சட்டமன்ற மரபுகளைப் பற்றி நியாய வாத வேதாந்தங்களைக் குன்றின் மீது ஏறி நின்றுப் பேசுகிறவர்கள் எழுதுகிறவர்கள் அன்றைக்குத் தங்களின் எரிச்சலைக் காட்டிக் கொள்ள எவ்வளவு மோசமாகச் சட்டமன்ற விதிமுறைகளை காலால் போட்டு மிதித்தனர் என்பதற்கு 1972 நவம்பர் 13-ஆம் நாள் நாள் சட்டமன்ற நிகழ்ச்சிகளே தக்க எடுத்துக் காட்டாகும். கேள்வி நேரம் முடிந்த பிறகு தான் அவையில் விளக்கங் கள் கோருவதோ அல்லது ஒழுங்குப் பிரச்சினை எழுப்புவதோ அவைத் தலைவரின் அனுமதியுடன் இடம் பெற முடியும். அதற்கு முற்றிலும் மாறாக நவம்பர் 13-ஆம் நாள் பேரவைத் தலைவர் அவையில் வந்து அமர்ந்ததுமே நண்பர் எம்.ஜி.ஆரும் அவருக்கு துணையாக ஒரு சிலரும் எழுந்து - கழக அமைச்சரவை யின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வாய்மொழி மூல மாகவே கொண்டு வந்தனர். நம்பிக்கையில்லாத் தீர்மானம் எழுத்து வடிவில் முன்னரே கொடுக்கப்பட்டு, அதனை எப்போது அவையில் எடுத்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டு அதன் பிறகு விவாதம், ஓட்டெடுப்பு இவைகள் எல்லாம் நடை பெற வேண்டுமென விதிகள் இருந்தாலும் கூட அவற்றை யெல்லாம் குறித்து ஒரு சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் எடுத்த எடுப்பிலேயே கழக அமைச்சரவை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டுமென்று எம்.ஜி.ஆர். அவர்கள், பேரவையில் கோரினார். வளர்த்த கடா, மார்பிலே பாயும் காட்சியைக் கண்டு நான் பதட்டமடையாமல் அமைதியாக உட்கார்ந்தி ருந்தேன்.