பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 நெஞ்சுக்கு நீதி விட்டால் தமிழ்நாட்டில் அழகாகக் கேட்பார்கள். "இவரை விட்டால் வேறு தலைவர் யார் இருக்கிறார்கள்?" என்று கேட்பார்கள். அப்படிப்பட்ட ஒரு மிகப் பெரிய தலைவர் இன்று அறுபதாவது வயதிலே அடியெடுத்து வைக்கின்ற நேரத்திலே "இங்கேயிருக்- கின்ற ஒரு கோமாளியின் ஆட்சியை - ஒரு விதூஷகனுடைய ஆட்சியை - தூக்கி எறிவதற்காக இன்றைய தினம் ஒரு அணி திரண்டிருக்கிறது. இந்தப் பெரிய அணியின் தலைவராக நான் கலைஞர் அவர்களைப் பார்க்கிறேன். எதிர்க்கட்சியிலே - இருக்கிற பல தலைவர்களுக்குச் சொல்வேன். இன்றைய தினம் தமிழகத்திலே நடைபெறுகின்ற அநியாயங்கள் - அக்கிரமங்கள் ஜனநாயகப் படுகொலைகள்- மக்களுடைய அவதிகள் வேறு எந்த நாட்டிலேயாவது இருக்கு மேயானால் அந்த நாட்டிலே ஆளுபவர்கள் எக்கதிக்கு ஆளாகி யிருப்பார்கள் தெரியுமா? இந்த நாட்டிலே இருக்கின்ற கேவலமான - மிகக் நிலைமை சொரணை கெட்டவர்களாக மானம் கெட்டவர்களாக கொஞ்சம் கூட மரியாதை இல்லாதவர் களாக தமிழர்கள் இன்றைய தினம் இருக்கிறார்கள். இங்கே யிருக்கின்ற தண்ணீர் தட்டுப்பாடு, மின்சார தட்டுப்பாடு, அரிசிப் பிரச்சினை வேறு எங்கேயாவது இருக்குமேயானால் அந்த நாட்டு மக்கள் எப்படியோ கிளர்ந்தெழுந்திருப்பார்கள். இன்றைக்கு ஒரு நல்ல நல்ல காலக் குறி தோன்றியிருக்கிறது என்று நான் கருதுகிறேன். கலைஞரின் தலைமையிலே நம்முடைய எதிர்க்கட்சி கள் எல்லாம் சேர்ந்து ஒரு பெரிய ஜனநாயகப் போராட்டத்தை நடத்தி, ஒரு கொடுங்கோல் ஆட்சி நடத்துபவனை வீட்டிற்கு அனுப்புவதற்கு நீங்கள் எல்லாம் பாடுபட்டாக வேண்டும். எம்.ஜி.ஆருடைய அருவருப்பான ஆட்சியை, மிகக் கேவலமான ஆட்சியை அப்புறப்படுத்துவதற்கு கலைஞர் அவர் கள் ஒரு அற்புதமான படைக்கருவி. தியாகத்திலே அவர்கள் வளர்ந்தவர்கள். நெருக்கடிகளை எல்லாம் சந்தித்தவர்; அடுத்த ஆண்டு அவருடைய மணிவிழா நடக்கும் நேரத்தில் இந்த ஆட்சி அகன்றது; தமிழர்கள் நலம் பெற்றார்கள் என்ற நல்ல நிலையை ஏற்படுத்த வேண்டும். அருமைத் தலைவரே, எங்கள் கண்ணின் கருமணியே, நீ நீடுழி வாழ்க. உன்னுடைய முயற்சிகள், போர்ப் பரணிகள் இந்த நாட்டிற்கும் வெளிநாடுகளிலே இருக்கும் தமிழர்களுக்கும் நல்ல பலனைத் தரட்டும் என்று ஒரு சகோதரனின் உள்ளத்தோடு உன்னை வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்"