பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 403 அன்றைய தினம் அந்த அளவிற்கு நிலைமையை சமாளித் திருக்காவிட்டால் அமைச்சரவையின் மீது நம்பிக்கை இல்லை என்று அவை முடிவு செய்துவிட்டதாக அ. தி. மு.க. வினரின் தூண்டுதலின் பேரில் பேரவைத் தலைவர் இடத்திலிருந்து மதி அவர்கள் அறிவித்திருப்பார்கள். பிறகு அதனைச் சமாளிப் பதற்குள் சட்ட சிக்கல்கள் எல்லாம் எழுந்திருக்கக் கூடும். அமைச்சரவை மீதுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எடுத்துக் கொண்டு விவாதிக்க நாங்கள் பயப்பட்டோம் என்றிருக்கக் கூடாது என்பதற்காக 7-12-72 அன்று நானே கழக அமைச்சரவை மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் ஒன்றை முன் மொழிந்தேன். அந்தத் தீர்மானத்தின் மீது நடந்த விவாதம் எம்.ஜி.ஆர். டெல்லியிலே கொண்டு போய் கொடுத்த புகார் பட்டியல் அதற்கான பதில் என்ற வகையிலே விளக்கமாக அமைந்தது. பெருவாரியான வாக்குகளால் கழக அமைச்சரவை மீது நம்பிக்கை வைக்கும் தீர்மானம் நிறைவேறியது. mane