பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி E 21 அதன்பிறகு மண்டபம் இழுத்துப் பூட்டப்பட்டது. போலீசார் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்த வேண்டிய தாயிற்று! அழுது அழுது நீர் வற்றிப் போயிருந்த கண்களில் அந்தப் புகை தாக்கவே கூட்டம் சற்றுப் பின்வாங்கியது. அதற்கடுத்து மண்டபத்தின் வெளி முகப்பில் அண்ணாவின் திரு உருவைக் காட்சிக்கு வைத்திட்டோம்! அவரது முகதரிசனத்தைக் கடைசியாகக் கண்டிடத் துடித்து புகைவண்டிகளில் இடமின்மையால் அவற்றின் கூரைகளில் பயணம் செய்தனர் பல லட்சக்கணக்கானோர்! மதுரையிலிருந்து சென்னை வந்த ஜனதா விரைவு வண்டியில் மேலே அமர்ந்து வந்தவர்கள் நாற்பது பேர், வண்டி கொள்ளிடம் பாலத்தைக் கட க்கும்போது பாலத்தின் மேலேயுள்ள இரும்பு உத்திரங்களில் மோதுண்டுச் சிதறி மாண்டனர். பிப்ரவரி மூன்றாம் நாள் மறைந்த அண்ணாவின் உடல் அடக்கம் மறுநாள் நடைபெற்றது. தலைநகரமெங்கணும் மனிதர் தலைகளே எனுமளவுக்கு • வரலாறு காணாத கூட்டத் தினிடையே அண்ணாவின் உருவத்தைச் சுமந்த பீரங்கி வண்டி நகர்ந்தது. மத்திய அமைச்சர் சவான் அவர்களும். கேரள முதல்வர் நம்பூதிரிபாட் அவர்களும் அந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். சென்னைக் கடற்கரையில் அமைக்கப் பட்ட கல்லறைக்குள் அண்ணாவைத் தாங்கியிருந்த சந்தனப் பேழை வைக்கப்பட்டது. அண்ணா! அண்ணா! அண்ணா! என்ற பேரொலிக்கு முன்னால் வங்கக்கடல் அடங்கிப் போயிற்று! 46 அண்ணா துயில்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் அமைதிக்கும் அழகிற்கும் பெயர் பெற்ற இடம். ஒரு பக்கம் நீண்ட மணற் பரப்பும் கடலும் இருக்கிறது. இன்னெரு பக்கம் 'உழைப்பின் வெற்றி" சிலையும், அதற்கப்பால் கம்பீரமான பல்கலைக்கழகக் கட்டிடமும் இருக்கின்றன. அருகாமையில் தமிழ்க் கவிஞர் கம்பரின் சிலை இருக்கிறது. தன் வாழ்நாள் முழுவதும் கல்வியின் குறிக்கோள் வெற்றிக்காக வும். சாதாரணத் தொழிலாளியின் நல்வாழ்வுக்காகவும் பட்ட அவர் ஓய்வு பெறுவதற்குப் பல்கலைக்கழகமும் இரு சிலைகளும் அந்த இடத்தைத் தகுதிவாய்ந்த இடமாக்கு கின்றன." பாடு அந்த அண்ணாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத் தைக் குறித்து பம்பாயிலிருந்து வெளிவரும். பிரபல ஆங்கில