பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 405 நாடுகளை இராசராசன் வென்றதாகவும் அவனுடைய மெய்க் கீர்த்திகள் விளக்குகின்றன. அத்தகைய மாமன்னன் இராசராசனின் ஆட்சியிலே இன்று இந்தியாவில் இருக்கின்ற மக்களாட்சி முறையை விட மிகச் சிறப்பான மக்களாட்சி முறையை அவன் முடியாட்சி முறை மூலம் செயல்படுத்தி வந்தான். நிர்வாகிகளை மக்களால் தேர்ந்தெடுக்க குடவோலை முறையைக் முதன்முதல் உலகிலேயே கொண்டு வந்த தமிழ் மன்னன் இவன் தான். இன்றைக்கு இருக்கின்ற ஊராட்சி முறைகளுக்கு முன்னோடியாக சீராட்சி நடத்திக் காட்டியவன் இராசராசன். மத்தியிலே அதிகாரங்களைக் குவித்துக் கொண்டிராமல் அதிகார முறையைப் பரவலாக்கி தன் நாட்டை மண்டலங்களாகவும், கூற்றங்களாகவும், நாடாகவும் பிரித்து அனைத்தும் சுயாட்சியோடு நடைபெறும் வகையில் ஆட்சி செய்தவன் இராசராசன். வள வரி ஏய்ப்பு செய்பவர்கள் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாதபடி சட்டம் வகுத்தவன் இராசராசன். இவ்வளவு சிறப்புக்குரிய மன்னன் கட்டிய கோயில் தான் தஞ்சை பெரிய கோவில். அறிவியல் உலகம் வியக்கத்தக்க வகையில் கட்டிய கோவில் இது. அத்தகைய கோயிலைக் கட்டிய இராசராசனுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக அரசு அவனுடைய சிலையினை அவன் கட்டிய கோயிலுக்குள் வைக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டு பலமுறை வாதாடி, போராடிய நிகழ்ச்சி கழக ஆட்சியில் முக்கியமானதொன்றாகும். ருக்கும்னு உண்மையிலேயே மக்களாட்சி முறையை மதிக்கின்ற அரசாக இந்திய அரசு இருந்தால் உலகிலேயே முதன் முதல் மக்களாட்சி முறையை ஏற்படுத்தி இன்றைய ஆட்சி நிர்வாகங் களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்த இராசராசனை ஜனநாயக நாட்டின் முதல் அரசனாக ஏற்று அவன் கட்டிய ஆலயத்திற் குள்ளேயே சிலையினைத் திறக்க மத்திய அரசு ஆனால் மத்திய அரசு இராசராசன் கட்டிய கோவிலுக்குள்ளே அவனுடைய சிலையினைத் திறந்து வைக்க தமிழக அரசின் சார்பில் கடிதம் மூலமாகவும், நேரிலும் பலமுறை கேட்டுக் கொண்ட பிறகும் அனுமதி தராமல் காப்போனைப் போல கோயிலுக்கு வெளியே வைப்பதற்குத்தான் அனுமதி தந்தார்கள். வாயிற்