பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 நெஞ்சுக்கு நீதி அதன் அதன் அடிப்படையில் 1972-ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு நாளன்று இராசராச சோழன் சிலைத் திறப்பு விழா தஞ்சை பெரிய கோவிலுக்கு அருகே நடைபெற்றது. அந்த விழாவிற்கு கல்வி அமைச்சர் நாவலர் தலைமை தாங்கிட, அமைச்சர் மன்னை வரவேற்பரை ஆற்றிட, நான் இராசராசசோழன் சிலையினைத் திறந்து வைத்தேன். தவத்திரு குன்றக்குடி சிலம்புச் செல்வர் அடிகளார், ம.பொ.சி., அமைச்சர் கண்ணப்பன் ஆகியோரும் உரையாற்றினர். அவ்வை டி.கே. சண்முகம் அவர்களின் இராசராச சோழன் நாடகம் விழா முடிவில் நடைபெற்றது. தலைமையில் அரசு சார்பில் அந்த விழா நடைபெற்றாலும், தஞ்சை நகரத்தையே கழக நண்பர்கள் அண்மையில் மறைந்து விட்ட தஞ்சை நடராசன் கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு அலங்கரித்திருந்தனர். ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அந்த விழாவில் கலந்து கொண்டனர். உணர்ச்சியும் உத்வேகமும் போட்டியிட மக்கள் அந்த விழாவில் ஆர்வம் காட்டினர். அந்த விழாவில் நான் பேசும்போது கூறியதாவது:- "அருள்மொழித்தேவன் எனும் இயற்பெயர் படைத்த மாமன்னன் இராசராசசோழனின் திருவுருவச் சிலைத் திறப்பு விழா இந்த இடத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த மாமன்னன் கட்டிய பெரிய கோவிலுக்குள்ளே அவனது சிலையை வைக்க வேண்டும் என்ற முயற்சியிலே நாம் வெற்றியினைப் பெறாமல் அவன் அமைத்த ஆலயத்துக்கு எதிரில் அவனது சிலையை நிறுவியிருக்கிறோம். அவன் ஆண்ட மண்ணின் தலைநகரில் அவன் கட்டிய கோவிலுக்குள் அவனது சிலையை திறந்து வைக்கக் கூடாது என்று மத்திய அரசு அனுமதி மறுத்து விட்டதற்காக நண்பர்கள் இங்கே வருத்தத்தோடு பேசினார்கள். அவர்கள் இராசராசனின் சிலையை கோவிலுக்குள் வைக்க அனுமதி மறுத்தத்தற்குக் காரணங்கள் உண்டு. சிலம்புச் செல்வர் அவர்கள் என்னைப் பார்த்து 'லட்சோப லட்சம் மக்கள் திரண்டிருக்கும் இந்தக் காட்சியைச் செய்திப் படப் பிரிவினர் படம் பிடித்தார்களே; அதை மத் திய அரசக்கு அனுப்பி வையுங்கள் என்று கூறினார்.