பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 407 - செய்திப்படம் பார்த்துத்தான் லட்சோப லட்ச மக்கள் கூடியிருக்கிறார்கள் என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய தில்லை. அவர்களுக்கு முன்பே தெரியும் - இந்த சிலை திறப்பு விழாவிற்கு இலட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்று கோவிலுக்குள் சிலை அமைப்பு விழா நடத்தினால் இந்த லட்சக் கணக்கான மக்கள் கூட்டம் இடம் கொள்ளாது அவதியுறும் என்ற காரணத்தால் தான் போலும்; கோவிலுக்குள் சிலை வேண்டாம்; வெளியே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்கள். கன்னித் தமிழ் மன்னன்-களம் பல கண்டவன் கடாரம் வென்றவன்- அவன் செல்லாத நாடில்லை; வெல்லாத பூமியில்லை- சோழன் சென்றான்; வென்றான்; ஆட்சியில் நிலைத்து நின்றான் எனும் பெரும் புகழுக்குரிய பெருமன்னன் சிலை அவன் கட்டிய பெருவுடையார் கோவிலில் வைக்க அனுமதி கிடைக்கவில்லை என்பது சாதாரண நிகழ்ச்சி அல்ல. ஆலயத்தைக் கட்டியவனுக்கு ஆலயத்தில் இடமில்லை வெளியே வைத்துக் கொள் எனும் ஆணை கேட்டதும்.....' இதற்குக் கூட உரிமை இல்லை என்றால் நமது மற்ற உரிமைகள் என்ன ஆவது? என்ற உணர்ச்சி தமிழர் உள்ளத்திலெல்லாம் அரும்பிடத் தொடங்கியது. இராசராசசோழன் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன் தமிழ் உணர்ச்சியின் திருவுருவாகத் திகழ்ந்தான். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சிலை உருவில் இங்கே நின்றிருந் தாலும் அந்த உணர்ச்சியை நமக்கு ஊட்டிக் கொண்டிருக்கிறான் சிலையை அமைக்கும்போது கோவிலுக்குள் இடம் தர மறுத்து விட்டதால் இங்கே சிலை அமைக்கப்படுகிறது என்ற சொற்றொடரை அமைக்குமாறு சிலம்புச் செல்வர் கூறினார். அவ்விதமே அமைத்திருக்கிறோம். இந்தச் சிலை திறப்பு பிரச்சினையை மாநில சுயாட்சியோடு தொடக்கக் காலத்தில் நாங்கள் இணைக்கவில்லை. இராசராச சோழன் தோன்றிய சதயத் திருநாளில் நடந்த விழாவின்போது இராசராச சோழனின் சிலையை கோவிலுக்குள் வைக்கும் எண்ணம் ஏற்பட்டது. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. மத்திய அரசுக்கு எழுதினோம். அப்போது கூட மாநில சுயாட்சியோடு இந்தப் பிரச்சினையை முடிச்சுப் போடும்