பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 நெஞ்சுக்கு நீதி எண்ணம் எழவில்லை. ஆனால்...தமிழகத்திலேயே மிகப் பெரிய ஆலயத்தைக் கட்டியவனுக்கு அந்த ஆலயத்திலே சிலை வைக்கக் கூடாது; இது தான் மத்திய அரசு நமக்குத் தந்த பதில். இது போன்று 1966-ஆம் ஆண்டிலும் அப்போதிருந்த காங்கிரஸ் ஆட்சியின் முதல்வர் பக்தவத்சலம் வேலூர் கோட்டைக்குள்ளே மிகப் பெரிய ஆலயம் இருக்கிறது. அதற் குள்ளே ஆண்டவன் சிலை இல்லை. ஆகவே அங்கே ஒரு சிலை வைக்க வேண்டும். அதோடு வேலூர் கோட்டையைப் பராமரிக்கும் பொறுப்பை மாநில அரசின் தொல்பொருள் காப்புத் துறைக்கு அளிக்க வேண்டும் என்று டில்லிக்கு கடிதம் எழுதினார். முடியாது என்பது தான் டில்லி தந்த பதில். முடியாது எனும் பதில் முன்னேற்றக் கழக ஆட்சிக்கு மட்டும் கிடைக்கும் பதிலல்ல; காங்கிரஸ் ஆட்சிக்கும் கிடைத்த பதில் தான்." அந்த இராசராச சோழன் சிலை திறப்பு விழாவில் சிலம்புச் செல்வர் ம. பொ. சி. பேசும்போது "இந்தச் சிலையை திறந்து வைத்ததன் காரணமாக அப்பரும்,திருஞானசம்பந்தரும்,மாணிக்க வாசகரும் தமிழக முதலமைச்சர் கலைஞரை வாழ்த்துவார்கள். கலைஞர் நினைத்திருந்தால் இதை தகராறுக்குரிய பிரச்சினை யாக ஆக்கியிருக்க முடியும். கலைஞர் அவர்கள் நினைத்திருந்தால் இந்தச் சிலை தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள சிலை-நிரந்தர மாக உள்ளே வைக்கும்வரை எந்த மத்திய மந்திரியும் இங்கே வரவிடாமல் தடுக்க எங்களால் முடியும். ஆனால் தர்மத்துக்கு அஞ்சுகிறோம்" என்றார். இது தஞ்சையில் நடைபெற்ற விழா. அடுத்து சோழ நாட்டின் தனிப் பெருந் தலைநகராக விளங்கியது பூம்புகார்! பொதுவாக கடலுடன் ஆறு கலக்கும் முகத்துவாரத்திற்கு புகார் என்பது பெயர். அதன்படி காவிரியாறு கடலுடன் கலக்கும் இடமும் புகார் என்றே வழங்கப்பட்டது. பின்னர், இந்தப் புகார் பொலிவின் காரணமாகவும், சிறப்பின் காரண மாகவும் பூம்புகார் என்று அழைக்கப் பெற்றது. பிற்காலத்தில் பூம்புகார் என்னும் பெயர் மாறி, காவிரி புகும் பட்டிணம் என்றாகி, அதுவும் நாளடைவில் காவிரிப்பூம்பட்டிணம், காவிரிப்பட்டிணம், காவேரிப்பட்டிணம் என்று பலவாறாக அழைக்கப்படலாயிற்று.