பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 411 ☐ அடுத்து கல்வி அமைச்சர் நாவலர் தலைமையில் சிலப்பதிகாரக் கலைக்கூடத்தை நான் திறந்துவைத்தேன். அதன் பின் பூம்புகார் கடற்கரை நிலா முற்றத்தில் நாவலர் தலைமையில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. அதில் தவத்திரு அடிகளார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., பேராசிரியர் ஆகியோர் உரை யாற்றிய பின் நான் உரையாற்றினேன். இரவு கவிஞர் கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்ட சிலப்பதிகார நாட்டியம் திருமதி கமலா குழுவினரால் நடத்தப்பட்டது. அதன்பின் நான் எழுதிய சிலப்பதிகார நாடகத்தை கரிகாலன் நாடக மன்றத்தினர் நடத்தினர். வெளி நாட்டுப் பயணிகளை கவரத் தக்க வகையில் இத்தகைய ஏற்பாடுகளை செய்ததோடு நின்று விடாமல், கலைக் கூடத் திறப்பு விழாவின்போது நான் கூறினேன். த் "இந்த இடத்தில் அழகிய கட்டிடங்கள், எழிலான மாடங்களை அமைப்பது மாத்திரம் தான் கழக அரசின் திட்டமல்ல; இப்பகுதி யில் வாழும் ஏழையெளிய மீனவர்களுக்காக தமிழக அரசு இப் போது தீட்டியிருக்கின்ற ஒரு திட்டத்தை இங்கே நான் வெளி யிடுவது நலம் என்று கருதுகிறேன். இந்தப் பூம்புகார் கடற்கரை ஓரத்தில் கிட்டத்தட்ட எழுநூறு மீனவர்கள் வாழ்கிறார்கள் அவர்களில் 400 பேர் கட்டு மரத்தை வைத்துக் கொண்டு தொழில் நடத்துபவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் எங்கள் கண்ணீரைத் தீர்க்க நீங்கள் எண்ண மாட்டீர்களா என்று அவர்கள் நினைப்பதற்குமுன் அதைச் செய்துமுடிகக வேண்டும் என்று கருதும் இந்த அரசு வீட்டு வசதித் துறை வாயிலாகவும் சென்னையில் உள்ள குடிசை மாற்று வாரியம் தரும் அனுபவத்தின் அடிப்படையிலும் இங்குள்ள மீனவ மக்களுக்கெல்லாம் விரைவில் அவர்களது குடிசைகளை மாற்றி நல்ல வீடுகள் கட்டித் தரப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியதோடு நின்று விடாமல் நாற்பது இலட்ச ரூபாய் நிதியினை அந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்து அவர் களுக்கு வீடு கட்டித தந்ததோடு, மீனவர்களுக்கு படகுகளும்,நைலான் வலைகளும் வழங்குவதற்கும் ஏற்பாடுகளைச் செய்தேன். ஏப்ரல் 18-ஆம் நாள் பூம்புகாரின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலையில் "சிலப்பதிகாரத்தில் பெரும் சிறப்புடையது புகார் காண்டமா? மதுரைக் காண்டமா? வஞ்சிக் காண்டமா?" எனுந்தலைப்பில் பட்டி மன்றம் நடைபெற்றது.