பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 முப்பெரும் இழப்பு am1972- 'ஆம் ஆண்டு தொடங்கி 1973-ஆம்ஆண்டு இறுதிக் குள்ளாக தமிழகத்தின் மூன்று பெரும் வைரத்தூண்கள் சாய்ந்து விட்ட சோக சரித்திர ஏடுகள் தமிழர்களின் கண்ணீர்ப் பெருக் கிடையே புரண்டு விட்டன. இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவரும் பெரியாரின் அன்புக்கும், பேரறிஞர் அண்ணாவின் பாசத்திற்கும், எனது மட்டற்ற மதிப்புக்கும் உரியவரான கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர் பெருந்தகையாளர் கள் 1972-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 4-ஆம் நாள் இயற்கை எய்தினார். மார்ச் இறுதியில் சென்னை ஸ்டான்லி மனையில் சிகிச்சைக்காகச் சென்ற அவரை மீண்டும் தமிழகம் மருத்துவ காண முடியாமல் கண்ணீரில் மிதந்தது. கவலைக்கிடமாக இருக்கிறது என்று செய்தி அறிந்தவுடன் கோவை மாவட்ட சுற்றுப் பயணத்தில் இருந்த நான் அதனை ரத்து செய்து விட்டு உடனடியாகச் சென்னை திரும்பினேன். அவர் உடல்நிலை. ஸ்டான்லி மருத்துவமனையில் அவரது நிலையைக் கண்ட போது அந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ள எனக்குத் தெம்பு இல்லாமல் போயிற்று. அவரது பேரன்பைப் பெரிதும் பெற்றவ ரான எனது ஆருயிர் நண்பர் அப்துல் சமது அவர்களும், கேரளத்துச் சிங்கமெனப் புகழப்பட்ட முகமது கோயா அவர் களும், அண்ணன் திருப்பூர் மொய்தீன், அன்பு நண்பர்கள் அப்துல் லத்தீப், காஜாமொய்தீன், பீர்முகமது ஆகியோரும் தென்காசி ரிபாயி அவர்களும் அங்போது காயிதே மில்லத் அவர் களின் படுக்கையருகே இருந்தனர்., கண்மூடி மயக்க நிலையில் படுத்திருந்த அவர் அருகே குனிந்து மெல்லிய குரலில் "அய்யா! நான் கருணாநிதி வந்திருக் கிறேன்" என்று கூறினேன். அந்தக் குரல் கேட்டு காயிதே மில்லத் அவர்கள் கண் விழித்துப் பார்த்தார். அந்த நிகழ்ச்சி குறித்து தென்காசி எ. கே. ரிபாயி அவர்கள், அவர்' எழுதிய "கவ்மின் காவலர்" என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதை அப்படியே கோடிட்டுக் காட்டுகிறேன்.