பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/422

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 நெஞ்சுக்கு நீதி சென்னை மாநகராட்சி தேர்தலின் போது சுதந்திரா கட்சி தி.மு. கழகத்துடன் உறவு கொண்டு போட்டியிட்ட போதிலும், அந்தத் தேர்தலில் தோழமைக் கட்சியான சுதந்திரா கட்சி தோல்வி கண்டது. அந்தத் தோல்வியைப் பற்றி ராஜாஜி கூறும் போது "தி.மு.கழக வெற்றி என்பது சாம்பார். அதில் பல கட்சிகள் காய்கறிகள்,பருப்பு போல் இருக்கின்றன. ஆனால்எனது கட்சி உப்பு போன்றது. உப்பின் உருவம் சாம்பாரில் தெரியாது. அது போல நாங்கள். இந்த வெற்றியில் எங்கள் உருவம் இல்லை. சாம்பாரில் உருவம் இல்லாமல் கலந்து உப்பு சுவையேற்றுவது போல இந்த வெற்றிக்கு நாங்கள் சுவையேற்றுகிறோம்" என்று சொன்னார். 1964-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது ராஜாஜி அவர்களுக்கும் தி.மு. கழகத்திற்கும் இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டது. 1937-38-ஆம் ஆண்டில் இந்தியை தமிழகத்தில் வெகுவேகமாக நுழைப்பதற்கு காரணமாக இருந்த ராஜாஜி அவர்களே, 1965-ஆம் ஆண்டு "இந்தி வெறியர் களின் போக்கைப் பார்க்க எனது மூளையில் கூட பிரிவினை எண்ணம் வந்து விட்டது" என்று கூறினார். 1967-ஆம் ஆண்டு தேர்தலின் போது ராஜாஜி மிகுந்த உற்சாகத்தோடு தி. மு. கழகம் ஆட்சி அமைப்பதைப் பார்த்து விட்டுத்தான் நான் கண் மூடவேண்டும் என்றார். அவரது அந்த ஆசையை தி.மு. கழகம் அவரது வாழ்நாளிலேயே நிறைவேற்றிக் காட்டியது. 1967-இல் கழக ஆட்சி அமைந்த சில நாட்களுக்குப் பிறகு தி.மு.கழகத்திற்கும் சுதந்திரா கட்சிக்கும் இடையே சிறிது கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதைப் பற்றி குறிப்பிடும் போது கூட ராஜாஜி அவருக்கே உரிய பாணியில் "தி. மு. கழகத்திற்கும் சுதந்திரா கட்சிக்குமான தேன் நிலவு முடிந்து விட்டது" என்று குறிப்பிட்டார். அதைப்பற்றி அண்ணா அவர்கள் கூறும் போது தேன் நிலவு முடிந்து விட்டது என்று ராஜாஜி கூறுவதற்குக் காரணம், குடும்ப வாழ்க்கையை இனி துவக்க வேண்டும் என்பதற்காகத் தான்” என்றார். அறிஞர் அண்ணா அவர்கள் காலத்திலும் சரி, அதற்குப் பிறகும் சரி, ராஜாஜி அவர்கள் என்பால் செலுத்திய அன்பு அலாதியானது. சிறப்பானது. 1964 இந்தி எதிர்ப்பு போராட்டத் தின் போது சென்னை ராயப்பேட்டை லெட்சுமிபுரம் யுவர் சங்கத் தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் ராஜாஜி அவர்