பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 நெஞ்சுக்கு நீதி நம்முடைய நாட்டுப் பண்பாட்டோடு ஒட்டி நின்ற மரியாதை முறை. இதை நான் மிகவும் பாராட்டுகிறேன்" என்று பின்னர் அது குறித்து ராஜாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பின்னர் சிறிது நேரம் அவருடன் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு வீட்டிற்குச் செல்ல புறப்பட்ட போது ராஜாஜி அவர்கள் என்னை ஆசிர்வதிப்பதாகக் கூறி "என் ஆசிர்வாதம் வீண் போகாது" என்று சிரித்துக் கொண்டே கூறினார். அதைக் கேட்டு நான் சிரித்துக் கொண்டே "வீண போகவில்லை. நீங்கள் கொடுத்து விட்ட ஆசிர்வாதத்தை உங்களாலேயே மாற்ற முடியாது" என்று கூறினேன். அதைக் கேட்டு ராஜாஜியும் சிரித்தார். பின், வாசல்வரை வந்து என்னை வழியனுப்பி வைத்தார். 1 நான் இவ்வாறு கூறியதை மனதிலேயே வைத்துக் கொண்டிருந்த ராஜாஜி அதற்குப் பின் சில நாட்கள் கழித்து ஒருநாள் திடீரென்று அவருக்கு உடல் நலம் இல்லை என்ற செய்தி கேட்டு நானும், நாவலரும் அவரைப் பார்க்கச் சென்றோம். அப்போது ராஜாஜி அவர்கள் நான் என்னுடைய மகன் அழகிரி திருமணத்திற்கு அழைப்பதற்காகத் தான் வந்திருக்கிறேன் போலும் என நினைத்துக் கொண்டு, திருமணத்திற்கு நேற்றே வாழ்த்து அனுப்பி விட்டேனே என்றும் கலப்புத் திருமணம் எனக் கேள்வியுற்று மகிழ்கிறேன் என்றும் கூறினார். திருமணத்திற்கு அழைப்பதற்காக இப்போது வரவில்லை. உடல் நலிவுற்றிருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டு பார்க்க வந்தேன் என்று சொன்னேன். உடனே என்னை அருகே அழைத்து தலையில் கைவைத்து ஆசி கூறி, நான் சில மாதங்களுக்கு முன்னால் சொன்ன வார்த்தைகளை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு "திரும்பப் பெறமுடியாத ஆசி கூறுகிறேன்" என்றார். நான் அந்தப் பெரிய மனிதர், திரும்ப முடியாத இடத்துக்குச் சென்று விட்ட போது, நட்பின் இலக்கணத்தைக் காட்சி வடிவில் கண்டோம். ஆம்: தந்தை பெரியார் அவர்கள், சுடுகாடு வரையில் வந்திருந்து ராஜாஜியின் உடலுக்குத் தீ மூட்டப்பட்ட போது நீர்வீழ்ச்சி யெனக் கண்ணீர் உகுத்தாரே; அந்தக் காட்சி தான் அது. அந்தச் சோக நிகழ்ச்சியைத் தொடர்ந்து சரியாக ஓராண்டுக்குள் தமிழகத்தை அதிரச் செய்த மற்றொரு சோக நிகழ்ச்சி: