பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 நெஞ்சுக்கு நீதி 419 பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் அரசியல் ஆசானும், சுயமரியாதை இயக்கத்தின் தந்தையும், இந்தி ஒழிப்புப் போரின் முதல் தளகர்த்தரும், பைந்தமிழ் நாட்டில் பகுத்தறிவுச் சுடர் பரப்பியவரும், கௌதமபுத்தருக்குப் பின் வந்த சமுதாயசீர்திருத்தப் புரட்சியாளரும், தென்னகத்தில் முதன் முதலாக சமதர்மக் கருத்துக்களை அறிமுகம் செய்தவரும், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் பாதுகாவலரும், திராவிடக் கழகத்தின் ஒப்பற்ற தலைவருமான பகுத்தறிவுச் சிங்கம், சமுதாயப் பணி நடத்திய சரித்திரநாயகன், தன்மான மூட்டிய தங்கம், தமிழினத்தின் வழிகாட்டி தந்தை பெரியார் அவர்கள் 1973-ஆம் ஆண்டு மூதறிஞர் ராஜாஜி அவர்கள் மறைந்து சரியாக ஓராண்டு கழித்து, டிசம்பர் 24-ஆம் நாள் காலை 7-40 மணிக்கு வேலூர் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். செய்தி கேட்டு இயக்கத் தோழர்களும், தாய்மார் களும் "நடக்கக் கூடாதது நடந்து விட்டதே; சீர்திருத்தப் போரின் நாயகனது புரட்சி வாழ்வு முடிந்து விட்டதே; என்று கதறினர். செய்தி அறிந்ததும் சில நிமிடங்கள் எனக்கு என்ன செய்வதென்றே புரியாத நிலை. பழைய நினைவுகள் என் மனதில் அலை மோதின. முதலமைச்சர் என்ற முறையில் என்னை வளர்த்த அந்த ஆசானுக்கு நான் செய்ய வேண்டிய கடமை என்ன என்று சிந்தித்தேன். அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிப் பயணம் செய்திட விரும்பி தலைமைச் செயலாளரை அழைத்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படியும், பெரியாரின் உடலை பொதுமக்கள் பார்வைக்காக ராஜாஜி மண்டபத்தில் வைக்கவும் ஏற்பாடுகளைக் கவனிக்கக் கூறினேன். அதிகாரிகள் பெரியார் அவர்கள் அரசுப் பொறுப்பில் எதிலும் இல்லாத காரணத்தால் அரசு மரியாதை செய்வதற்கு விதிமுறைகள்படி வழியில்லை என்று கூறினர். அப்போது அவர்களிடம் நான் கூறினேன். "காந்தியடிகள் எந்த அரசுப் பொறுப்பில் இருந்தார்? எனவே நாம் விரும்பியபடி தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை தரப்பட்டே ஆகவேண்டும். அதனால் கழக அரசு கலைக்கப்படக் கூடிய நிலை தோன்றுமே யானால், அதை விட பெரிய பேறு எனக்கு இருக்க முடியாது. எனவே விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் தடக்க வேண்டியதைக் கவனியுங்கள்” என்று கூறனேன். அதன்படி ஏற்பாடுகள் நடைபெற்றன. பெரியாரின் உடலை உடனடியாக சென்னைக்கு எடுத்து வரச்செய்து, ராஜாஜி மண்டபத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.