பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 நெஞ்சுக்கு நீதி விழா நடத்தப்பெற்று, 1974 ஆகஸ்டு 18-ஆம் நாளன்று அந்த எழுச்சிமிக்க கோட்டையின் திறப்பு விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கட்டபொம்மனின் கோட்டை குறித்தும், புகழ் பாட அதற்கான விழா உருவாக்கப்பட்ட குறித்தும் சில விபரங்கள்:- 180 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மண்ணிலிருந்து விடுதலைக் குரல் எழுப்பிய மாவீரன்-"வானம் பொழியுது; பூமி விளையுது; மன்னவன் காணிக்கு ஏது வரி?" என்று முதல் முழக்க மிட்ட மாவீரன்-கட்டபொம்மன் நினைவாக எழுப்பப்பட்ட கோட்டை அது. வரலாறுகளில் காணப்பட்ட செய்திகளை ஆதாரமாகக் கொண்டு முன்பு கட்டபொம்மன் கோட்டை இருந்த இடத்தில்தான் இந்தக் கோட்டையை எழுப்பியிருக் கிறோம். கோட்டையின் வடிவமைப்பு 15 மீட்டருக்கு 15 மீட்டர் சதுர அளவுள்ளதாகவும், பாதுகாப்பு அரண்களைக் கொண்ட; மாதிரி அமைப்புடன் கட்டப்பட்டுள்ளது. கோட்டையின். மையத்தில் பத்து மீட்டர் உயரமுள்ள மைய தர்பார் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணடபத்தின் மேல்புறக் கடைசி யில் 3 மீட்டருக்கு 3 மீட்டர் அளவுக்கு மேடை உருவாக்கப் பட்டுள்ளது. மேல்புறக் கடைசியில் உள்ள மேடையில் உடைவாளின் மீது கையினை வைத்தவாறு தர்பார் மண்டபக் கொலு வீற்றிருக்கும் அமைப்பில் வீரன் கட்டபொம்மனின் அழகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதற்கு இருபுறத்திலும் ஊமைத்துரை, வெள்ளைத் தேவன், தானாபதிப்பிள்ளை, சுந்தரலிங்கம் ஆகியோர் உருவங்கள் சிற்ப வடிவங்களாக வடித்தெடுக்கப்பட்டு பதிக்கப்பட்டுள்ளன. வெளிப்புற அழகுக்கு ஏற்றவண்ணம் ஏற்றவண்ணம் நன்கமைக்கப்பட்ட புல்வெளியும், தோட்டமும் உருவாக்கப்பட்டு, கருத்தைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளன. ஒட்டப்பிடாரம் கிராமத் திலிருந்து கோட்டைக்குச் செல்லும் சாலையில் ஐந்து அழகு வளைவுகள் வீரபாண்டிய கட்டபொம்மனோடு உடன் வாழ்ந்து மறைந்த வீரப்பெருமக்களின் நினைவு வளைவுகளாக அமைக்கப் பட்டன. நெல்லை மாவட்ட மக்களெல்லாம் திரண்டிருக்க கட்டபொம்மன் கோட்டை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு கல்வி