பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 நெஞ்சுக்கு நீதி நிலையை மாற்றி அமைத்து தமிழகத்தின் வீரத்தை நினைவு படுத்தும் வகையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை எழுப்பியிருக்கின்ற முதல்வர் கலைஞர் அவர்களையும், பொதுப் பணித் துறையினரையும் நான் பெரிதும் பாராட்டுகின்றேன். தமிழகம் வீரத்திற்கு எப்போதுமே மதிப்புத் தந்து வருகிறது என்பதற்கு இதுவும் நல்ல எடுத்துக்காட்டாகும். கட்டபொம்ம னுக்கு கருங்கல்லினாலேயே உருவச்சிலை அமைத்து கோட்டை யையும் அமைத்திருப்பது தமிழகத்திற்கு பெருமை தருவதாகும். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு கலைஞரின் முயற்சியால் அழியாத நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது" என்றார். சிலம்புச் செல்வர் ம.பொ.சி., "இதுவரை நான் அனுபவித் திராத மகிழ்ச்சியை -இனி என்றும் அனுபவிக்க முடியாத மகிழ்ச்சியை இந்த சிறப்பான விழாவின் மூலம் நான் அடைகிறேன். கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் கலைஞர் நிறைவேற்றுகிறார் என்பதற்கு இது அடையாளம். நடைபெற்ற ஊர்வலமும், அமைந்திருக்கிற கோட்டையும் வரலாற்றுச் சிறப்புடையதாகும். புராணங்களிலே ஒரு நகரத்தை நிர்மாணிப்பார்களானால் தெய்வத் தச்சன் மயனால் உருவாக்கப் பட்டது என்று கூறுவார்கள். அதைப்போல இந்த சிறப்புகளை எல்லாம் காணும்போது சரித்திரம் காணாத அற்புதத்தை கலைஞர் நிறைவேற்றியிருக்கிறார். இந்த சாதனை தமிழன் என் உணர்வு படைத்த ஒவ்வொருவரும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நன்றி உணர்ச்சியோடு போற்றத்தக்கதாகும். இன்றைக்கு சரியாக 175 ஆண்டுகளுக்கு முன்பு 1799-ஆம் ஆண்டு கயத்தாறு சாலையில் கட்டபொம்மன் தூக்கிலிடப் பட்டான். இன்று கலைஞர் அவர்கள் கட்டபொம்மனுக்கு கோட்டை எழுப்பியிருக்கிறார். தமிழா, உன் வரலாறு திரும்புகிறது. தமிழ்நாட்டில் இரண்டு கோட்டைகள் இருக்கின்றன. ஒன்று கலைஞர் ஆளும் கோட்டை; இன்னொன்று கலைஞர் அமைத்த கோட்டை இவ்வளவு சிறப்பான காரியங்களைச் செய்து வரும் தம்பி களுக்கு ஆசி கூற அண்ணன் இல்லையே என்ற குறை இருக்கிறது. என்னை அண்ணனாக நம்புங்கள்; நான் வாழ்த்துக் கூறுகிறேன்' என்றார்.