பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/433

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 427 "தெய்வம் தொழாது" கலைஞரைப் பின்பற்றினால் பெய்யெனப் பெய்யும் மழை என்று சொல்லத் தோன்றுகிறது யார் கேட்டாலும் வரம் தரும் திறன் பெற்றவர் கலைஞர். இந்தப் பகுதிக்கு கலைஞர் அவர்கள் இன்னும் பல வரங்களைத் தரவேண்டும். உய்வில்லை "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; செய்நன்றி கொன்ற மகற்கு" என்று சொல்வார்கள். பாஞ்சாலங் குறிச்சி மக்கள் நன்றிக்கு மிகவும் எடுத்துக்காட்டானவர்கள். கலைஞர் அவர்கள் போராட்டம் துவக்கும் காலத்தில் பாஞ்சாலங் குறிச்சி வீரப் பரம்பரையினர் கலைஞருக்கு வலது கரமாக இருப்பார்கள். சுப்பு அவர்கள் பேசுகையில் ஆதிக்கத்திற்கு கூற்றம் கலைஞர் என்று குறிப்பிட்டார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மை. இந்தச் சின்னஞ்சிறு உருவமா அந்த வீரத்தைப் பெற்றது என்று அவரைப் பாராட்ட வேண்டுமென்று தோன்ற வில்லை. அன்னை அஞ்சுகம் அம்மையாரைத்தான் பாராட்ட வேண்டும். இத்தகைய வீரம் படைத்த தலைவரைப் பார்த்தா பதவி ஆசை பிடித்தவர் என்று சொல்கிறார்கள். வீரம்தான் வீரத்தைப் போற்ற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் கலைஞர் அவர்கள்" என்றார். அந்த விழாவில் பேசிய நண்பர் சுப்பு- “கடந்த முறை இந்த இடத்தில் கட்டபொம்மன் விழா நடை பெற்றபோது கலைஞருக்குப் பக்கத்திலே நாங்கள் அமர்ந்திருந்தாலும் கட்சி அடிப்படையில் தூரத்தில்தான் இருந்தோம். அந்த விழாவில் பேசுகையில், தோழர் மணலி அவர்களையும் என்னையும் பார்த்து "நீங்கள் சொல்கிற திட்டங்களை எல்லாம் நிறைவேற்றிக் காட்டி வருகிறோம். நல்ல காரியத்திற்கு நீங்கள் ஏன் துணையாக இருக்கக் கூடாது" என்று கலைஞர் கேட்டார். மக்களுக்கு நன்மை செய்யும் கலைஞரை வீழ்த்துவது என்பது எட்டப்பன் வேலை என்பதால் அவருக்குத் துணையாக இருக்க வேண்டும் என்ற வகையில் நானும் இங்கே வந்திருக்கிறேன்" என்று குறிப் பிட்டார். இப்படியெல்லாம் என்னைப் பாராட்டியவர்கள், சிலர் இப்போது என்னை வேகவேகமநகத் தாக்குகிறார்கள் என்றாலும், அவர்கள் இப்போது தாக்குவதை சிலர் நினைவூட்டும்போது, அவர்கள் அப்போது பாராட்டிய இது போன்ற உரைகள் எல்லாம் என் நினைவிற்கு வந்து, இப்போது அவர்கள் தாக்கிப் பேசுவதை மறக்க துணை செய்கிறது.